புஸ்ஸி ஆனந்த் சரியில்லை.. பஞ்சாயத்து ஆரம்பம்.. விஜயை கடுப்பாக்கிய "பஞ்சதந்திரம்".. என்ன நடந்தது?
சென்னை: தமிழக வெற்றி கழகத்திற்குள் நிலவும் உள் முரண்பாடுகள் தற்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. புஸ்ஸி ஆனந்தின் சமீபத்திய செயல்பாடுகளிலும், அவரது அணுகுமுறைகளிலும் விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனந்தின் முக்கிய பொறுப்புகள் குறித்த பல புகார்களை விஜய் பெற்று வருவதாகவும், அவருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புஸ்ஸி ஆனந்த் மீது கோபத்தில் விஜய்
புஸ்ஸி ஆனந்தின் பஞ்ச தந்திரம்.. அதாவது அவரின் 5 செயல்கள் விஜயை கடுப்பாக்கி உள்ளதாம். இந்த அதிருப்திக்கு முக்கிய காரணங்களில் ஒன்று 1, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை அவர் கையாண்ட விதம். நிவாரணப் பணிகளை ஆனந்த் சரிவர ஒருங்கிணைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சரியான நேரத்தில் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. சம்பவத்திற்குப் பிறகு, அவர் ஊடகங்களைத் தவிர்த்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதது, எதிர்மறையான எண்ணத்தை மேலும் அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. அவர் தலைமறைவானதை விஜய் விரும்பவில்லை. மற்ற நிர்வாகிகள், விஜய் உட்பட பலர் பொதுவில் வந்தனர். ஆனால் புஸ்ஸி ஆனந்த் அப்படியே தலைமறைவாகிவிட்டார். அதன்பின் வந்தவரும் கட்சி பணிகளை சரியாக செய்யவில்லை. ஒரு பிரச்சனை என்றதும் அப்படியே காணாமல் போய்விட்டார்.
கட்டமைப்பை உருவாக்காத புஸ்ஸி ஆனந்த்
3. மற்றொரு முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், ஆனந்த் எதிர்பார்த்தபடி கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை உருவாக்கவில்லை. பல மாவட்ட அளவிலான பதவிகள் இன்னும் காலியாக உள்ளன. மேலும் பல பகுதிகளில் முறையான கட்சி அமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை. இந்த மெதுவான முன்னேற்றம் கட்சியின் விரிவாக்கத் திட்டங்களைப் பாதித்துள்ளதாகத் தொண்டர்கள் கூறுகின்றனர்.
அவர் அதிக அதிகாரத்துடன் செயல்படுவதாகவும், கட்சி தனக்குச் சொந்தமானது போல நடந்து கொள்வதாகவும், விஜயின் தலைமைத்துவத்தின் பிரதிநிதியாக செயல்படவில்லை என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
4. ஆனந்துக்கு மற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர்களைப் போல அரசியல் செல்வாக்கு இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் அருண் போன்றவர்களின் செல்வாக்கு அடிமட்ட அளவில் அதிகரித்து வரும் நிலையில், ஆனந்தின் புகழ் மற்றும் ஏற்புத்தன்மை குறைந்து வருகிறது. இது, அவர் ஒரு முக்கிய பதவியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து கட்சிக்குள் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது.
5. அரசியல் ரீதியாக புஸ்ஸி ஆனத்திற்கும் டெல்லியில் தொடர்புகள் இல்லை. அதாவது அவருக்கு உள்ளூர் தொடர்புகள் உள்ளன. அதே அளவிற்கு டெல்லியில் அவருக்கு தொடர்புகள் இல்லை. சென்னை தாண்டி வடக்கே அவருக்கு தொடர்பே இல்லை. அவருக்கு இருப்பது எல்லாம் வடதமிழ்நாடு, புதுச்சேரி தொடர்புகள் மட்டுமே.
விஜய் ஆக்சன்
கட்சியின் பிம்பத்தைப் பாதுகாக்கவும், சிறந்த ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தவும் விஜய் விரைவில் தலையிடுவார் என்று தமிழக வெற்றி கழக உள் வட்டாரங்கள் நம்புகின்றன. 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கும் நிலையில், பொறுப்புகளின் மறுசீரமைப்பு இருக்கும் என்று மூத்த உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் விஜய் விரைவில் புஸ்ஸி ஆனந்த் மீது ஆக்சன் எடுப்பார் என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு, இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் மத்தியில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளதால், கட்சித் தலைமை என்ன அடுத்த நடவடிக்கை எடுக்கிறது என்பதை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி












Click it and Unblock the Notifications