ஆத்தி.. ஆர்பி உதயகுமார் பைத்தியமாயிட்டாரு! நயினாரால் விஜய்யை தொட முடியுமா? வெடித்த தவெக எம்எல்ஏ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மேலும் தற்கொலை படையாக மாறுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியதும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் ஆர்பி உதயகுமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி இருக்கிறார் உசிலம்பட்டி தவிக்க எம்எல்ஏ விஜய்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 1000க்கும் அதிகமான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் தலைமையில் நடைபெற்றது.

TVK Vijay

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்., நயினார் நாகேந்திரனுக்கு கேவலமாக, அசிங்மாக இல்லையா? அவரது கட்சியை வளர்க்க தெரியவில்லை. அவரது கட்சியை வளர்க்க வேண்டுமென்றால் நாலு பேருக்கு நல்லது செய்யுங்கள்.

எம்எல்ஏ விஜய்

அதை விட்டுவிட்டு தலைவர் விஜய்-யை கேவலமாக பேசிவிட்டு நீங்க பாட்டுக்கு இருந்து விடுவீர்களா? தமிழ்நாட்டு முதலைச்சர் அவரது இமையை கூட தொட விடமாட்டோம்? நீங்க பாட்டுக்கு மைக்-ல பேசிட்டு, பேட்டி கொடுத்திட்டு போய்ருவீங்களா, விட்ருவோமா விடவே மாட்டோம். நயினார் நாகேந்திரன் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். சுயவிளம்பரம் தேடுவதற்கு தமிழ்நாடு முதல்வரை பேசிருவீங்களா?

நயினார் நாகேந்திரன்

உங்களை ஒரு போதும் விடமாட்டோம், முதல்வர் பக்கத்தில் நெருங்க கூட முடியாது. மக்களே உங்களை தடுத்துவிடுவார்கள். இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கீங்க இப்போதும் மத்தியில் ஆட்சியில் இருக்கீங்க,தமிழ்நாடு மக்களுக்கு என்ன செய்துவிட்டீர்கள் பேசுவதற்கு.. தமிழ்நாடு முதல்வரை பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

ஆர்.பி. உதயகுமார்

இன்னொருவர் முன்னாள் எம்எல்ஏவாகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த ஆர்பி உதயக்குமார். உசிலம்பட்டியில் மதுரையின் 10 தொகுதியை அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்தாலும் தவெகவை உசிலம்பட்டியில் அசைத்து கூட பார்க்க முடியாது. ஆர்.பி.உதயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டார் போல தினசரி முதல்வரை பற்றி பேசினால் தான் வீடியோவில் வருவோம் என தினசரி வீடியோ போடுகிறார். எங்களை பற்றி வீடியோ போடுகிறேன் வீடியோ போடுகிறேன் என முதல்வரை நினைத்து தூங்குவதே இல்லை போல..

விசில் சின்னம்

வரும் உள்ளாட்சி தேர்தலில் அவரே விசில் சின்னத்திற்கு ஓட்டு கேட்டுவிடுவார் போல அதனால் நாம் கவலைப்பட தேவையில்லை. அவரே ஓட்டு கேட்கட்டும் அவரே வந்து ஓட்டு போட்டுவிடுவார்.. இன்னும் அமைச்சர் மனநிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தானே அர்த்தம் இன்னும் அமைச்சர் அமைச்சர்னு சொல்லிக் கொண்டு திரிகிறார்.

தவெக

அவர் எம்எல்ஏ வுக்கு கூட தகுதி இல்லை என மக்கள் தகுதி நீக்கம் செய்துவிட்டனர், உனக்கு தகுதி இருக்கா தலைவரை ( விஜய் ) பற்றி பேசுவதற்கு., மிஸ்டர் முன்னாள் அமைச்சர் அவர்களே. அமைச்சராக இருந்த போது உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு நிரந்தர அரசாணை கொடுக்க முடிந்ததா, தண்ணீர் கொடுக்க முடிந்ததா., ஒரு சாக்கடை பிரச்சனையை கூட சரி செய்ய முடிந்ததா? முன்னாள் அமைச்சர், இந்த கட்சி தலைவர் என்கிற எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை தான்., இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் தவெகவை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும்.

தற்கொலை படை

தற்கொலை படையாக மாறுவேன் அந்த படையா மாறுவேன் என்று சொல்பவர்களுக்கு., எல்லாத்தையும் மாறித்தான் இங்கு வந்திருக்கிறோம், எல்லா துயரையும் தாண்டி தான் வந்திருக்கிறோம், எங்கள் வயதுக்கு மீறிய கஷ்டத்தை தாண்டி தான் வந்திருக்கிறோம். போய் மக்களுக்கு நல்லது செய்யுங்கள், உங்களை கையெடுத்து கும்பிடும் மக்களின் காசை திண்டீங்கல, அந்த நன்றி விசுவாசத்திற்காகவாவது நல்லது செய்யுங்கள்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+