பெரம்பூர்+ திருச்சி கிழக்கில் விஜய் தோல்வி? 200-ல் தவெகவுக்கு டெபாசிட் காலி? இந்த கணிப்பை பாருங்க
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும். விஜய் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளிலேயே அவருக்கு வெற்றி கிடைக்காது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) இந்தத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

"விஜய் போட்டியிடும் தொகுதிகளிலேயே அவர் வெற்றி பெறுவது கடினம்; 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் இழக்க நேரிடும்" என அதிரடியான கருத்துக்களை முன்வைக்கிறார் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்.
சமீபத்திய தேர்தல் தரவுகளின்படி, வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதை வைத்து அது ஆளும் ஆட்சிக்கு எதிரான அலை என்று பலரும் கணித்து வருகின்றனர். ஆனால், இதனை முற்றிலுமாக மறுக்கும் தராசு ஷியாம், வாக்கு சதவீதத்தை விட 'அப்சல்யூட் ஓட்டர் கவுண்ட்' எனப்படும் உண்மையான வாக்காளர்களின் எண்ணிக்கையே முக்கியம் என்கிறார்.
2021 தேர்தலை விட சில தொகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகமாகத் தெரிந்தாலும், பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசுகையில், 1989-ல் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஏற்படுத்திய தாக்கத்தை உதாரணமாகக் காட்டினார்.
அப்போது அவர்கள் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்திய போதிலும், அடிமட்ட அளவில் வலுவான கட்டமைப்பு கொண்ட திமுகவே ஆட்சியைப் பிடித்தது. அதேபோல், விஜய்யின் செல்வாக்கு என்பது 8 முதல் 12 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்றும், இது டெபாசிட் வாங்குவதற்குத் தேவையான 16.6 சதவீதத்தை விடக் குறைவு என்றும் அவர் விளக்குகிறார்.
திமுக மற்றும் அதிமுக போன்ற நிலைநிறுத்தப்பட்ட கட்சிகளுக்கு இருக்கும் 'பூத் மேனேஜ்மெண்ட்' வலிமை விஜய்யின் கட்சிக்கு இல்லை என்பது ஒரு முக்கிய பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு வாக்காளர் வாக்குச் சாவடிக்குள் சென்று சின்னத்தைக் கண்டறிந்து வாக்களிப்பது வரை அவர்களுக்கு வழிகாட்ட முறையான பயிற்சி பெற்ற தொண்டர்கள் தேவை.
இந்த விஷயத்தில் தமிழக வெற்றி கழகம் இன்னும் பின்தங்கியே இருப்பதாக தராசு ஷயாம் தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார். மேலும், திமுகவின் வாக்கு வங்கியில் விஜய் கைவைப்பார் என்ற வாதத்தையும் அவர் நிராகரிக்கிறார்.
திராவிட சித்தாந்தம், சமூக நீதி மற்றும் அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த வாக்காளர்கள் அவ்வளவு எளிதாக மாற்றுக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது அவர் கணிப்பு. குறிப்பாக, பெரம்பூர் போன்ற தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களின் உள்ளூர் செல்வாக்கை மீறி விஜய் வெற்றி பெறுவது மிக மிகக் கடினம் என்பதே கள யதார்த்தமாக முன்வைக்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது வெறும் நட்சத்திர அந்தஸ்து மட்டுமல்ல, அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் செய்துள்ள பணிகள் மற்றும் கட்சியின் அடிமட்டக் கட்டமைப்புதான். அந்த வகையில், 2026 தேர்தல் களம் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என்பதை தராசு ஷியாம் தெளிவுபடுத்துகிறார்.
மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும்போதுதான் இந்த அரசியல் கணிப்புகளின் உண்மைத்தன்மை முழுமையாகத் தெரியவரும்.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்! -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி












Click it and Unblock the Notifications