4 மணி நேரத்தில் எப்படி போஸ்ட் மார்ட்டம் செய்தீர்கள்? கோர்ட் கேட்ட கேள்வி! தமிழக அரசின் பரபர பதில்
சென்னை: நான்கு மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்தீர்களா? பிரேத பரிசோதனைக்கு எத்தனை பேர் நியமிக்கப்பட்டார்கள்? என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரிக்கிறது. விஜய் மீதான சென்னை உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு எதிராக த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதம் வைத்து வருகின்றனர்.
தமிழக அரசு வாதம்
இந்த வழக்கில் தமிழக அரசு வைத்த வாதத்தில், உயிரிழந்த சிறுவனுடைய தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது. அதே வேளையில் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும், தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக உயர் நீதிமன்றம்தான் நியமித்தது.

அஸ்ரா கர்க் என்ற மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணைக் குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். சிறந்த அதிகாரியாக இருந்து கொண்டிருக்கின்றார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம்.
தன்னுடைய மகனை இழந்து இங்கு நிற்கக்கூடிய அந்த தந்தையினுடைய வலி மட்டுமல்ல, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய அனைவரின் வலியையும் நாங்கள் அறிந்துள்ளோம். அதேவேளையில், தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற இந்த ஒரு காரணத்தின் அடிப்படைக் கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாடு அதிகாரிகள். எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர வேண்டும்.
இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ Limited Resourceதான், என்று வாதம் வைத்தது.
உச்ச நீதிமன்றம் கோர்ட் கேள்வி
நான்கு மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்தீர்களா? பிரேத பரிசோதனைக்கு எத்தனை பேர் நியமிக்கப்பட்டார்கள்? என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசு அளித்த பதிலில், இந்த சம்பவத்தை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய கலெக்டர் அனுமதி அளித்தார். முதல்வர் வந்ததும், அருகிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கே அதற்கான கட்டமைப்பு இருந்தது. இதனால் உடனே பிரேத பரிசோதனை மேற்கொண்டோம் , அருகே உள்ள மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு இருந்தது, என்று தமிழக அரசு பதில் அளித்தது.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒரு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது. வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கில் மதுரை அமர்வு, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சென்னை அமர்வு இதனை விசாரிப்பதை மேற்கோள் காட்டி, அங்கு முறையீடு செய்ய அறிவுறுத்தியது. அதன் அடிப்படையிலேயே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. கோர்ட்தான் அஸ்ரா கார்க் என்ற அதிகாரியை நியமித்தது. தமிழக அரசு அதில் எந்த தலையீடும் செய்யவில்லை.
அஸ்ரா கார்க் , சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார். அஸ்ரா கார்க் நேர்மையான அதிகாரி. உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது என்பதை அதில் அரசின் தலையீடு இல்லை. அதை கேள்வி எழுப்ப முடியாது. முக்கியமாக குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை என்று தமிழக அரசு வாதம் வைத்து உள்ளது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications