கூட்டணி பேச வந்தப்ப இப்படி சொல்லலையே.. நான்தான் சி.எம் வேட்பாளர்.. விஜய்யால் கடுப்பான தலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விஜய் எடுத்த இந்த தீர்மானம் காரணமாக ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் விஜய் சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பல கட்சிகள் அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று நடந்த தவெக பொதுக்குழுவில் விஜய் தலைமையில்தான் தவெக தேர்தலை சந்திக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்தில், தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும். தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது., என்று கூறப்பட்டது.

TVK Vijay

விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அப்செட்

விஜய் எடுத்த இந்த தீர்மானம் காரணமாக ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் விஜய் சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பல கட்சிகள் அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

1. விஜய் சார்பாக கூட்டணிக்கு பேச வந்தார்கள்.. அப்படி வரும் போதெல்லாம் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. இரண்டு பெரிய தலைகள் வந்து எங்களிடம் பேசினார்கள். கூட்டணிக்கு வாருங்கள் இடங்களை தேர்வு செய்யலாம் என்று சொன்னார்கள். ஆனால் அப்போதெல்லாம் விஜயை முதல்வர் வேட்பாளர் என்று எங்களிடம் திணிக்கவில்லை.. இப்போது திடீரென தீர்மானம் போடுகிறார்கள் என்று மூத்த அரசியல் தலைகள் சிலர் கோபம் அடைகின்றனர்.

2. விஜய் சார்பாக எங்களிடம் பேசிய யாரும் விஜய் தலைமையில்தான் கூட்டணி என்று கூறவில்லை.. இப்போது திடீரென எங்கள் தலைமையில்தான் முடிவு என்று கூறுகிறார்கள் என்று புலம்புகின்றனர்.

3. அதோடு காங்கிரஸ் தரப்பிலும் விஜய் சார்பாக கூட்டணி பேசப்பட்டு உள்ளது. அப்போதெல்லாம் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று யாரிடமும் சொல்லப்படவில்லை.. ஆனால் இப்போது திடீரென தீர்மானம் போடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

4. ஜெயலலிதா பொதுவாக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் போதே வேட்பாளர்களை அறிவிப்பார். கூட்டணி கட்சிகளை பெரிய அளவில் மதிக்க மாட்டார்.. அப்படிதான் கூட்டணி பேச்சுவார்த்தை முடியும் முன்பே விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு விட்டார். ஜெயலலிதா பாணியில் செய்வதாக நினைத்து கூட்டணிக்கு வரப்போகும் கட்சிகளை அவமதிக்கிறார் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.

5. முதல்வர் வேட்பாளர் என்பது.. கூட்டணி கட்சிகள் சேர்ந்து எடுக்கும் முடிவு. ஆனால் ஒரு பக்கம் கூட்டணி பற்றி பேசிக்கொண்டே.. விஜய் திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது மூத்த அரசியல் தலைகள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+