Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் பக்கம் வண்டியை திருப்பிய பாஜக.. கிலியில் எடப்பாடி பழனிசாமி.. செம டிவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அதிமுக பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் தவெக விஜய்யை கூட்டணிக்குள் இழுக்கும் பாஜக முயற்சியால் எடப்பாடி பழனிசாமி கடும் குழப்பத்தில் மூழ்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக 23 கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தன் ஆகியோரும் திமுகவுடன் இணைந்துள்ளனர். பல முன்னாள் அதிமுக அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகளும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். [TVK Vijay]

tvk-vijay-edappadi-palanisamy-upset-with-bjp-s-move-to-bring-tvk-vijay-in-nda

அதிமுக பாஜக கூட்டணியில் தவெக

தவெக பக்கம் தாவுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியும் திமுக கூட்டணியை விட்டு விலகவில்லை. அதேநேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ஆதரவு பாமக மற்றும் பாஜக தவிர சொல்லிக் கொள்ளுமளவுக்கு வேறு எந்த பெரிய கட்சிகளும் இணையவில்லை.

தவெக காங்கிரஸ் கூட்டணியானால் சிறுபான்மை வாக்குகள் பிரிந்து தாங்கள் வெற்றி பெறலாம் என கணக்கிட்ட அதிமுக பாஜக கனவும் கனவாகவே போய்விட்டது.

திமுக கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து களத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடும். இதன் பிறகும் தங்களது கூட்டணியை வலுப்படுத்தாவிடின் கடினம் என்பதை உணர்ந்த பாஜக, தவெகவை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு காய் நகர்த்தி வருகிறது.

அமித்ஷா ஸ்கெட்ச்

ஏற்கனவே தவெகவை கூட்டணியில் இணைக்க அதிமுக மேற்கொண்ட முயற்சிகள் பஸ்பமாகிவிட்டன. இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர். நடிகருமான பவன் கல்யாண் மூலம் பாஜக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ மீண்டும் விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல ஜனநாயகன் படத்தை வெளியிடவும் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

அதிமுக கூட்டணியில் இணைவதற்கு விஜய்க்கு நேரடியாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். திமுகவுக்கு இணையான வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரம் காட்டி வருகிறார். ஓபிஎஸ், தேமுதிக என அவர்களின் டெம்ப்ளேட் பார்முலாக்கள் கைவிட்டு போனதால், அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரே வாய்ப்பு தவெக மட்டும் தான்.

எடப்பாடி பழனிசாமி அப்செட்

இதில் பாஜகவினர் மகிழ்ச்சியானலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏகத்துக்கும் அப்செட்டாகியுள்ளாராம். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். நான் தான் முதல்வர் என்பதில் அவர் பிடிவாதமாக இருக்கிறாராம். விஜய் உள்ளே வந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் குழப்பம் ஏற்படும். ஆட்சி அதிகாரம் பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அச்சப்படுகிறாராம்.

ஏற்கனவே கூட்டணியில் உள்ள பாமக, பாஜகவுடன் அதிமுக தொகுதி பங்கீட்டை முடிக்கவில்லை. இதனால் அவர் மீது டெல்லி பாஜக கடும் அப்செட்டில் உள்ளது. தற்போது தவெகவை இணைக்கும் முடிவால் எடப்பாடி குழப்பத்தில் ஆழ்ந்திருப்பது பாஜக மேலிடத்தை கொந்தளிக்க செய்துள்ளது. இப்படியே போனால் எடப்பாடி பழனிசாமி அவர் வசம் வைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காது என பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள்.

விஜய் மாஸ்டர் பிளான்

மறுபக்கம் விஜய்க்கு சிக்கல் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் அதிமுக -பாஜக கூட்டணியில் தவெக இணைவதாக விஜய் தரப்பில் தான் செய்திகளை கசிய விடுகிறார்கள். இருக்கும் பிரச்சனைகளில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்வதற்காக விஜய் இப்படி காய் நகர்த்துகிறார். பாஜக எதிர்ப்பு அரசியல் திமுகவுக்கு கைக் கொடுத்ததை போல தவெகவும் லாபமடையும் என எதிர்பார்க்கிறார். ஆனால் அவர் அதிமுக - பாஜகவில் இணைய மாட்டார் என பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+