நடிகையுடன் உறவு.. கண்டுபிடித்த பின்பும் இரக்கமே இல்லாமல் தொடர்ந்தார் விஜய் .. சங்கீதா குற்றச்சாட்டு
சென்னை: தவெக தலைவர் விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்ததாக அவரின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடித்ததாக கூறியுள்ள சங்கீதா, அதன்பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்ததாக தெரிவித்திருக்கிறார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு சங்கீதா மனு தாக்கல் செய்திருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன்பின் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது சிக்மா என்ற படத்தை சந்தீப் கிஷனை வைத்து இயக்கி வருகிறார். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் திருமணம் முடிந்து 27 ஆண்டுகளுக்கு பின் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன் வைத்திருக்கிறார்.
அதன்படி, நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நான் இந்த விஷயத்தை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி மார்ச் 20ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றத்தில் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் நேரில் ஆஜராகவில்லை என்றாலும், அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினர் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். அதன்பின் விஜய்யின் எந்தப் படத்தின் விழாவிலும் சங்கீதா பங்கேற்கவில்லை. விஜய் கட்சி தொடங்கிய போதும் கூட அவரது பெற்றோர் பங்கேற்றனர். ஆனால் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா என்று யாரும் பங்கேற்கவில்லை.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார்












Click it and Unblock the Notifications