துணை முதல்வர் + 5 அமைச்சர் பதவி.. எடப்பாடிக்கு பெரிய செக் வைக்கும் விஜயின்.. மாஸ்டர் பிளான்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் விஜய் தரப்பு எடப்பாடி பழனிசாமியிடம் குறைந்தது 4-5 அமைச்சர்கள் பதவியாவது வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் அதிமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி - விஜய் பேச்சு
இதற்காக எடப்பாடி பழனிசாமி - விஜய் இருவரும் போனில் பேசி வருவதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கூட்டணிக்கு கொண்டு வருவதற்காக அவரிடம் 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 100 இடங்கள் எல்லாம் வழங்கப்படாது.
இதற்காக விஜயிடம் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் வைத்த கோரிக்கை
ஆனால் இதில் விஜய் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளாராம். அதில்.. துணை முதல்வர் பதவி தேவை. ஆனால் அதுமட்டுமல்ல.. துணை முதல்வர் பதவியோடு 4-5 அமைச்சரவை பதவிகளும் தேவை என்று கூறி உள்ளாராம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. விஜயின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் எடப்பாடி பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் நம்மிடம் பேசுகையில்.. கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.
நோ சொல்லாத விஜய்
மேலும், பிரச்சாரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திப்பதாகவும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார் என்று அதிமுக வட்டாரம் தெரிவித்தது . இந்த அழைப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக அதிமுக வட்டாரம் தெரிவித்தது. இந்த அழைப்பில், எடப்பாடி பழனிசாமி கரூர் சம்பவத்திற்கு தனிப்பட்ட வகையில் விஜயிடம் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முழு ஆதரவையும் வழங்கினார் என்று கூறப்படுகிறது.
மேற்குப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மூத்த அதிமுக தலைவர் இது பற்றி நம்மிடம் கூறுகையில், விஜய் எடப்பாடி பேசியது உண்மைதான். கூட்டணிக்கு வாருங்கள் என்று எடப்பாடி கூறினார். உங்களுக்கு முழு சப்போர்ட் கொடுக்கிறேன் என்று எடப்பாடி கூறினார். இதற்கு விஜய் பாசிட்டிவ்வாக பேசி உள்ளார். 2026 பொங்கலுக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என்று அந்த மூத்த அதிமுக தலைவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications