Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் கைகோர்ப்பது தான் உங்களுக்கும், உங்கள் கட்சியின் எதிர்காலத்திற்கும் நல்லது. என்டிஏ கூட்டணிக்குள் வருவதால் உங்களுக்குத் தான் லாபம். எனவே யோசிச்சு முடிவெடுங்க.... என அதானி தரப்பு தூதுவர் விஜயிடம் மிகவும் கரிசனமாக பேசியிருக்கிறாராம். விஜயும் யோசிப்பதாக சொல்லியிருக்கிறராரம்.

மூன்றாவது முறையாக சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லி சென்று வந்துள்ளார். உண்மையில் சிபிஐ விசாரணை என்ற பெயரில் அரசியல் டீலிங் பேசுவதற்காகத்தான் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார் விஜய் என பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை உண்மை என்றாக்குவது போல டெல்லியில் விஜயுடன் ஒரு ரகசிய அரசியல் சந்திப்பு நடந்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும், பாஜக சார்பில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபர் ஒருவரின் தூதுவர் விஜயை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

tamil nadu assembly elections 2026 dmk aiadmk

சிபிஐ விசாரணைக்காக சனிக்கிழமை இரவு டெல்லி சென்ற விஜய் அங்கு தாஜ் ஹோட்டலில் தங்கினார். அடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் சிபிஐ விசாரணைக்காக விஜய் தயாராகி வந்த நிலையில், சிபிஐ விசாரணை எல்லாம் சும்மா தாங்க...டோண்ட் ஒர்ரி...பி ஹேப்பி... நாம வேற டீலிங் பேசுவோம் என விஜயை சந்தித்திருக்கிறார் ஒருவர். அவர் யார் என்றால் பாஜக தலைமையின் நெருங்கிய நண்பரான கார்ப்பரேட் சாம்ராட் அதானியின் தூதுவர் என்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் முக்கியமான விவகாரங்கள் டிஸ்கஸ் செய்யப்பட்டுள்ளதாம்.

விஜயை டெல்லிக்கு வரவழைத்து, அவரிடம் மனம் விட்டு சில விஷயங்கள் பேச வேண்டும் என்ற பாஜக பிளான்படி தான் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாம். இந்த சந்திப்பின் போது, திமுகவை எதிர்த்துக் கொண்டு. தமிழகத்தில் அரசியல் செய்வதோ, சினிமா தொழில் செய்வதோ எவ்வளவு கடினம் என அதானியின் தூதுவர் விஜய்க்கு பாடம் நடத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஜயின் நிலைமை என்னவாகும் என்பதை அவருக்கு அதானியின் தூதுவர் ஓப்பனாக (கொஞ்சம் ஓவராகவே) விளக்கியுள்ளாராம்.

இந்த தேர்தல் வாழ்வா சாவா போராட்டம் என்பதால் சமயோசிதமான முடிவை எடுக்க வேண்டும் என விஜய்க்கு அவர் அட்வைஸ் செய்துள்ளாராம். ''திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உங்களின் அரசியல் எதிர்காலம் அவுட்! திமுகவை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தல், அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தல் என வரிசையாக நீங்கள் தோல்வியை சந்திக்க நேரும். தொடர் தோல்வி ஏற்பட்டால் அரசியலுக்கு புதிதான உங்கள் தொண்டர்களை தக்கவைப்பது அவ்வளவு எளிதல்ல. ஒருமுறை கூடிய கூட்டத்தை இழந்துவிட்டால் மீண்டும் சேர்ப்பது கடினம். சரி, அரசியல் வேண்டாம்... சினிமா பக்கம் ஒதுங்கிவிடலாம் என்றால் அங்கும் சிக்கல் தான். சினிமா இண்டஸ்ட்ரியே தற்போது யார் கண்ணசைவில் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அதனால் அதற்கும் வாய்ப்பில்லை. எனவே, பாஜக தயவு தான் உங்களின் எதிர்காலத்தை காப்பாற்ற ஒரே வழி என ஏகத்திற்கும் அட்வைஸ் செய்திருக்கிறாராம் அதானியின் தூதுவர்.

மேலும், உங்களையும், உங்கள் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் இந்த தேர்தலில் கணிசமான வெற்றியை நீங்கள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். உங்கள் தொண்டர்கள் சட்டமன்றத்திற்குள் சென்றால் மட்டும் தான் உங்களால் அவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையை கொடுக்க முடியும். தனித்து நின்றால் இதெல்லாம் சாத்தியாகாது. பாஜக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் இணைந்து நின்றால் மட்டுமே உங்கள் வெற்றி எளிதாகும். எனவே, நல்ல முடிவை எடுங்கள் என அக்கறையோடு அட்வைஸ் செய்திருக்கிறாராம் அதானியின் தூதர்.

இதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்ட விஜய், ஏற்கனவே, என்னை பாஜகவின் பி டீம் என்று விமர்சனம் செய்கிறார்கள். இப்போ கூட்டணி வைத்தால் அதை உறுதி செய்வது போலாகும். எங்களுக்கான ஆதரவு தமிழகத்தில் அமோகமாக இருக்கிறது. தனித்து நின்று நாங்கள் ஜெயிக்கிறோம். தேர்தலுக்குப் பிறகு, என்.டி.ஏ. கூட்டணிக்கு வருவதை முடிவு செய்யலாம். அதுவும் இல்லையென்றால், என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவியுங்கள். இது எங்கள் தொண்டர்களிடையே விமர்சனங்களை தாண்டிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதை அப்படியே வாக்குகளாக மாற்றுவது எளிது. என சில பாயிண்ட்டுகளை முன்வைத்தாராம் விஜய். தொடர்ந்து இரு தரப்பிலும் பல்வேறு விவகாரங்கள், சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாம். முடிவில்,, மற்ற நிர்வாகிகளோடு ஆலோசித்துவிட்டு சொல்கிறேன் என முடித்துக் கொண்டாராம் விஜய். ஆனாலும், பாஜக பக்கம் சாயும் மனநிலையில் விஜய் இருப்பதாகத் தான் தெரிகிறது என நம்பிக்கை சிக்னலை தூதுவர் அதானிக்கு பாஸ் செய்திருக்கிறாராம்...

- சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+