ஓடிடியில் வந்த ஜெயிலர் 2.. ஆனால் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்படி ஒரு ஏமாற்றமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் நாளை நவம்பர் 12ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் படத்தை பார்க்க தவறியவர்கள் ஓடிடி ரிலீஸ்க்காக காத்திருக்கும் நிலையில், கூடுதல் காட்சிகளையும் சேர்த்து பார்க்கலாம் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்போது ஏமாற்றமான தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் உடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான இந்த படத்தில் சில நடிகர்களின் காட்சிகள் திரையரங்க ரிலீஸில் இல்லை. அதிலும் குறிப்பாக சந்தானம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது, அதனால் அவர் காமெடியாக இந்த படத்தில் நடித்திருக்கிறாரா? என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவருடைய காட்சிகளே படத்தில் வரவில்லை.

Jailer 2 ott

கட் பண்ணபட்ட காட்சிகள்

அதேபோல் மோகன்லால் நடித்த சில காட்சிகளும் குறைக்கப்பட்டதாக பேசப்பட்டது. அவருடைய ஆடை வடிவமைப்பாளர் கூட மோகன்லாலின பல காட்சிகளை தூக்கி விட்டார்கள், அடுத்த பாகத்தில் மோகன்லால் நடித்தால் நான் அவருடன் பணியாற்றவே மாட்டேன் என்றெல்லாம் போஸ்ட் போட்டிருந்தார். இதுவும் அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் இந்த காட்சிகள் எல்லாம் ஓடிடியில் இணைத்துவரும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. குறிப்பாக 30 நிமிடங்கள் வரை கூடுதல் காட்சிகள் படத்தில் சேர்க்கப்படலாம் என்று முன்பு தகவல்கள் பரவின.

ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ்

ஆனால் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியான படத்தின் நீளமும் இதே என்பதால் ஓடிடியில் கூடுதல் காட்சிகள் இல்லாமல் தியேட்டர் ரிலீஸ் மட்டும் தான் வெளியாகிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் தியேட்டர் ரிலீஸில் காட்டப்படாத காட்சிகளை பார்க்கலாம் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.

நாளை முதல் பார்க்கலாம்

இது ஒரு பக்கம் இருக்க ஜெயிலர் 2 திரைப்படம் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பலமொழிகளிலும் படம் வெளியாகிறது. மோகன்லால் நடித்த காட்சிகளை பார்ப்பதற்காக மலையாள ரசிகர்கள் காத்திருந்தால் அவர்களுக்கு அது வருத்தத்தை தான் கொடுக்கும். ஆனாலும் தியேட்டரில் படத்தை பார்க்காதவர்களுக்கு வீட்டிலேயே பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தியேட்டரில் இந்த படம் பெரியதாக கொண்டாடப்பட்டாலும் ஓடிடியில் ட்ரோல் ஆகப் போகிறதா? அல்லது இன்னும் கொண்டாடப்பட போகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+