108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை! விபத்தில் சிக்கியவர் வைத்திருந்த ரூ.2 லட்சம் பத்திரமாக ஒப்படைப்பு

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. விபத்தில் சிக்கியவர் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் மேலக்கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பணி நிமித்தமாக அரியலூர் வந்த இவர் பின்னர், மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு திரும்புவதற்காக இருசக்கர வாகனத்தில் அரியலூர்-தஞ்சை சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார்.

Honest 108 Ambulance Staff Earn Praise for Returning Accident Victim s 2 Lakh

அப்போது வாரணவாசி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்த பேரிகார்டில் கவனக்குறைவாக இரு சக்கர வாகனத்தை விட்டதால் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் 108 அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு மருத்துவ உதவிக்காக தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

முன்னதாக கிருஷ்ணமூர்த்தி மயக்க நிலையில் இருந்த பொழுது அவரது வாகனத்தில் இருந்த கைப்பை ஒன்றையும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களான கார்த்திக் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் பத்திரமாக உடன் எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

அதனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரவேற்பறையில் பத்திரமாக ஒப்படைத்தனர். அந்தப் பையில் ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் வங்கி புத்தகங்கள், ATM கார்டுகள், ஆதார் உள்ளிட்ட பிற அடையாளச் சான்றுகள் அடங்கிய முக்கியமான ஆவணங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கியவரை உரிய நேரத்தில் மீட்டதுடன், அவர் வைத்திருந்த 2 லட்சம் பணத்தையும் நேர்மையுடன் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயலை அரியலூர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+