தவெக எம்எல்ஏக்களுக்கு ‘சர்ப்ரைஸ்’.. பரிசுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்! கிப்ட் இதுதான்
சென்னை: மாமல்லபுரத்தில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் நடந்த தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் விஜய் அனைத்து எம்எல்ஏக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி 'கிப்ட்' வழங்கி 'சர்ப்ரைஸ்' கொடுத்தார்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி 6 மாதத்தை நிறைவு செய்துள்ளது. இதற்கிடையே தான் அமைச்சர்கள், எம்எல்ஏக்களில் சிலர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை கையில் எடுத்து எதிர்க்கட்சியினர் முதல்வர் விஜய்யின் தவெக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் 6 மாத ஆட்சியை நிறைவு செய்துள்ள முதல்வர் விஜய் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தவெக எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்று அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலையில் மாமல்லபுரத்தில் தனியார் ஹோட்டலில் தவெக எம்எல்ஏக்களின் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் பல்வேறு அறிவுரைகளை அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு வழங்கினார்.
இதுதொடர்பாக விஜய் பேசுகையில், ''நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்கள் சேவையாற்ற வேண்டும். ஒவ்வொரு எம்எல்ஏக்களும் தங்களின் தொகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு அதனை சரிசெய்ய வேண்டும். சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் காவல் துறைக்கு நான் முழு சுதந்திரம் அளித்துள்ளேன்.
நம் கூட்டணியில் உள்ளவர்களை நமக்கு எதிர்க்கட்சிகள் நிறைய உள்ளன. இதனால் கவனமுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக எந்த ட்ராப்பிலும் சிக்காமல் மக்கள் நலத்திட்டங்களை செய்ய வேண்டும்'' என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
அமட்டுமின்றி, ''என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். என்னை சந்திக்க விடாமல் யாராவது தடுக்கிறார்களா? அதிகாரிகள் யாராவது பணி செய்ய விடாமல் தடுக்கிறார்களா?'' என்று எம்எல்ஏக்களிடம் தனித்தனித்யாக முதல்வர் விஜய் கேட்டுள்ளார்.
கூட்டத்தின் முடிவில் அனைத்து தவெக எம்எல்ஏக்களுக்கும் தீபாவளி பரிசாக முதல்வர் விஜய் பட்டு வேஷ்டி - சட்டை மற்றும் பட்டு சேலை வழங்கினார். அதன்பிறகு ஒவ்வொரு எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் தனித்தனியாக போட்டோ எடுத்து கொண்டுள்ளார். தீபாவளி பரிசு பெற்ற பிறகு ஒவ்வொரு எம்எல்ஏக்களும் நட்சத்திர ஹோட்டலை விட்டு வெளியேறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
