தலைகீழாக மாறிய ட்விட்டர்.. புதிய பெயர், புதிய லோகோ.. அது என்ன "எக்ஸ்"? எலான் மஸ்க் பரபர முடிவு
சென்னை: ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை எக்ஸ் என்று மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். தற்போது X.COM என்ற தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இன்று புதிய லோகோ வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். தனியார் நிறுவனமாக பங்குசந்தையில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தை மொத்தமாக எல்லா பங்கிற்கு காசு கொடுத்து வாங்கினார் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதன் ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நீக்கினார். முக்கியமாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவாலை பணியில் இருந்து நீக்கினார். அதை தொடர்ந்து பல இந்தியர்கள் உட்பட ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் ட்விட்டர் நிறுவன பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பும் நீக்கப்பட்டது.

இந்த விவகாரங்களுக்கு இடையில் திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. அதன்படி ப்ளூ டிக் முறையின்றி வழங்கப்பட்டு உள்ளது. இதை நீக்க போகிறோம். மாறாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக காணாமல் போனது. பல செய்தி நிறுவனங்களின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. அதன்பின் போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
கட்டுப்பாடு: அதன்படி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்தார். அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் உடனடியாக இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை எக்ஸ் என்று மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். தற்போது X.COM என்ற தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதை கிளிக் செய்தால் அது தானாக ட்விட்டர் பக்கத்திற்கு எடுத்து செல்லும். இன்று ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை நீக்கப்படும். அதற்கு பதிலாக எக்ஸ் கொண்டு வரப்படும். இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ட்விட்டர் தளம் மாற்றப்பட்டு எக்ஸ் தளமாக மாறும். இதில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
ட்விட்டர் வருங்கால சிஇஓ யாக்கரினா இது தொடர்பாக செய்த ஸ்டில், எக்ஸ் நிறுவனம்தான் இனி எதிர்காலம். வீடியோ, ஆடியோ, மெசேஜிங், பேமெண்ட், பேங்கிங் எல்லாம் சேர்ந்து ஒரே இடத்தில் இருக்கும் விதமாக ஒரு பிராண்டாக இது இருக்கும். எல்லா சேவைகளை அளிக்கும் இடமாக இது இருக்கும். ஏஐ மூலம் இது செயல்படும். எக்ஸ் நம்மை எல்லாம் இணைக்க போகிறது என்று தெரிவித்துள்ளார்.
த்ரெட்ஸ்: சமீபத்தில்தான் ட்விட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் உருவாக்கப்பட்டது. மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டு இருக்கும் த்ரெட்ஸ் மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் கிளை செயலியாக இந்த புதிய சமூக வலைத்தளம் த்ரெட்ஸ் செயல்படும்.
ட்விட்டர் நிறுவனம் போலவே தோற்றம் கொண்ட த்ரெட்ஸ் சிறிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்யும் தளமாக இயங்க உள்ளது. இந்த த்ரெட்ஸ் தொடங்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2 மில்லியன் யூசர்களை கடந்தது. தற்போது 100 மில்லியன் யூசர்களை கடந்து த்ரெட்ஸ் நிறுவனம் சென்று கொண்டு இருக்கிறது. ட்விட்டரில் 368 மில்லியன் யூசர் உள்ளனர்.
இன்னொரு பக்கம் ட்விட்டர் நிறுவன சீக்ரெட்டுகளை திருடியதாக த்ரெட்ஸ் மீது ட்விட்டர் புகார் வைத்துள்ளது. ட்விட்டர் செயலியை காப்பி அடித்து த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ புதன்கிழமை மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு இது குறித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் பிற அறிவுசார் சொத்துக்களை முறையான அனுமதி இன்றி வேண்டுமென்றே சட்டத்திற்குப் புறம்பாக தவறாகப் பயன்படுத்தியதாக நம்புகிறோம்.
அதனால் உங்கள் மீது வழக்கு தொடுக்க இருக்கிறோம். மெட்டா டஜன் கணக்கான முன்னாள் ட்விட்டர் ஊழியர்களை பணியமர்த்தியது எங்கள் செயலியை காப்பி அடித்து உள்ளது. ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் பிற ரகசியமான தகவல்களை மெட்டா நிறுவனத்திற்கு வழங்கி உள்ளனர். சிலர் ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கும் போதே இந்த தகவல்களை மெட்டா நிறுவனத்திற்கு வழங்கி, அதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தை காப்பி அடித்து த்ரெட்ஸ் செயலியை உருவாக்கி உள்ளனர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications