வயிறு பெருசா இருக்கே.. 2 கிலோ தங்கத்தை விழுங்கிய 2 பெண்கள்.. அயன் பட பாணியில் ஒரு கடத்தல்!
சென்னை ஏர்போர்ட்டில் 2 கிலோ தங்கம் கடத்திய 2 பெண்கள் கைதாகினர்
Recommended Video
சென்னை: 2 பெண்களுக்கும் வயிறு பெரிசா இருக்கும்போதே அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.. ஆனால் 'அயன்' பட பாணியில் அவர்களை கடத்தி சென்று விட்டு, திரும்பவும் அயன் படத்தில் ஜெகன் வயிற்றுக்குள் தங்கத்தை கேப்சூலில் கலந்து கொடுப்பார்களே.. அதுபோலவே 2 பெண்கள் சிக்கி உள்ளனர். தெரசா.. பாத்திமா... தெரசாவுக்கு 35 வயது.. பாத்திமாவுக்கு 40 வயது!
சென்னை ஏர்போர்ட்டில் இலங்கையில் இருந்து பாத்திமா, திரேசா ஆகிய இரு கர்ப்பிணிகள் வந்து இறங்கினார்கள். ஆனால் அவர்களின் நடவடிக்கையில் சுங்க துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதனால், பெண் அதிகாரிகள் அந்த 2 பெண்களையும் சோதனை செய்தனர். ஒன்றும் தென்படவில்லை.

உள்ளாடைகள்
பிறகு, தனியாக ஒரு ரூமுக்குள் அழைத்து அவர்களது உள்ளாடைகளை சோதனை செய்தனர்.. அப்போதும் ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்தாலும் சந்தேகம் மட்டும் போகவே இல்லை. எனவே, இருவரது பாஸ்போர்ட்- விசாவை வாங்கி வைத்து கொண்டு, பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவர்களை பெண் அதிகாரிகள் அம்ரூத் திரிபாதி, ரேனுகுமாரி ஆகியோர் அழைத்து சென்று, வயிற்றை ஸ்கேன் பண்ணி பார்த்தனர்.

தங்கம்
அப்போது வயிற்றுக்குள் கரையாத கேப்ஸ்யூல்கள் இருந்தன.. அந்த கேப்ஸ்யூல்களுக்குள் 1800 கிராம் எடை கொண்ட தங்கமும் இருந்தது. அதாவது 2 கிலோ தங்கம்! உடனே ஆஸ்பத்திரியை விட்டு அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அந்த சமயத்தில், 2 கார்களில் திடுதிடுப்பென மர்ம கும்பல் ஒன்று வந்தது.

விசாரணை
பாத்திமா, திரேசா 2 பேரையும், தாங்கள் வந்த கார்களில் இழுத்து போட்டது. இதை தடுக்க வந்த அந்த சுங்கத்துறை பெண் அதிகாரிகளை அந்த கும்பல் தாக்கி விட்டு பறந்தது. இதையடுத்து, இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யாமல், இதனை விசாரித்து கடத்தப்பட்ட 2 பெண்களை மீட்டுக் கொடுக்கும்படி பல்லாவரம் போலீசில் பெண் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

கடத்தல்காரர்கள்
இதையடுத்து விசாரணையும் ஆரம்பமானது. அப்போது, ஸ்கேன் செய்யும் சென்டர்தான் ஏர்போர்ட்டுக்கு உள்ளேயே இருக்கிறதே.. பிறகு எதற்காக நீங்கள் அந்த பெண்களை வெளியில் அழைத்து வந்தீர்கள்... அதுவும் தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தீர்கள்.. நீங்கள் இந்த ஆஸ்பத்திரிக்குதான் அந்த பெண்களை அழைத்து வருகிறீர்கள் என்று கடத்தல்காரர்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, பெண் அதிகாரிகள் விழித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக ஏர்போர்ட் ஸ்டேஷனிலேயே புகார் தரும்படிபல்லாவரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாஸ்போர்ட்
"எங்களை கடத்தி சென்றது யார் என்று தெரியவில்லை. ஆனால், எனிமா கொடுத்து வயிற்றில் இருந்த 1800 கிராம் எடை கொண்ட தங்க கேப்சூல்களை எடுத்து கொண்டு விரட்டி விட்டார்கள். எங்களுக்கு பாஸ்போர்ட், விசா மட்டும் தந்திடுங்க.. நாங்க எங்க நாட்டுக்கு போய் சேர்ந்துடறோம்" என்று கண்ணீர் விடுகிறார்கள் அந்த 2 பெண்களும்!

வலுக்கும் கோரிக்கை
எனினும் இரு பெண்களும் கைதாகி உள்ளனர்.. அந்த காரில் வந்த அந்த கும்பல் யார் என தெரியவில்லை என்பதால் தேடும் படலமும் ஆரம்பமாகி உள்ளது.. எனிமா கொடுத்து எடுக்கப்பட்ட தங்கத்தையும் மீட்கும் வேலை ஆரம்பமாகி உள்ளது. இந்த விவகாரத்தில் நிஜ பின்னணி என்ன, உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.
-
பெரிய சதி.. அதானியின் ஒப்பந்தத்தை கைப்பற்றிய சீன நிறுவனம்! பின்னணியில் இவ்வளவு நடந்து இருக்கா? -
சேலம் மக்களுக்கு ஜாக்பாட்.. 210 ஏக்கர் நிலம் ரெடி பண்ணுங்க..!கோயம்புத்தூர் உடன் நேருக்குநேர் போட்டி? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications