கேப்பே விடமாட்டாங்க போலயே! ஆட்சியில் மட்டுமல்ல.. கட்சியிலும் புது பவர்.. கட்டை கலைத்து ஆடும் உதயநிதி
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
நேற்று முதல்நாள் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்று உள்ளார். ஒரு பக்கம் அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில்.,. இன்னொரு பக்கம் உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.

துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. ஆளுநர் பதவி ஏற்பு செய்துவைக்க தேவையில்லை.
உதயநிதி ஸ்டாலினுக்கு வந்த இந்த புதிய பொறுப்போடு திமுகவில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
1. அதன்படி லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம். அதேபோல் வேலை பார்க்காத இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம்.
2. நன்றாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை வைத்து அவர்களுக்கு ப்ரமோஷன் கொடுக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதன்படி புதிதாக இவர்களில் சிலரை மாவட்ட செயலாளர்களாக களமிறக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
3. அதேபோல் அமைச்சர்களாக பணியாற்றாதவர்கள், சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்கள் லிஸ்டையும் எடுத்துள்ளார். இந்த லிஸ்டை வைத்து அதிலும் சில மாற்றங்களை செய்ய உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
4. கடந்த லோக்சபா தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
5. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
6. இது போக திமுகவில் மாவட்ட சீரமைப்பும் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திமுகவில் மாவட்டங்களை பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம்.
7. ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது 2 சட்டமன்ற தொகுதி அல்லது 3 சட்டமன்ற தொகுதி என்று மறுவரையரை செய்ய திமுக முடிவு செய்துள்ளதாம்.
அதிகாரி யார்?: உதயநிதி துணை முதல்வாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த செயலாளர் பதவியை பிடிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியாக இருக்கும் பதவி கிடையாது. இது அரசு ரீதியான நியமன பொறுப்பு. துணை முதல்வர் மாநில அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய பதவி ஆகும். மாநில அமைச்சர்கள் குழுவின் சீனியரிட்டியில் இரண்டாவது மிக உயர்ந்த பதவி ஆகும் இது.
உதயநிதி துணை முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக அதிகாரிகள் இடையே தற்போது போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications