தவெக தலைவர் விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின்.. கொடி பாடலுக்கு என்ன ரியாக்‌ஷன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கட்சி கொடியை அறிமுகம் செய்த நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தவெக கொடி பாடல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தான் இன்னும் அந்தப் பாட்டை பார்க்கவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று அறிமுகம் செய்து ஏற்றி வைத்தார். இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில், சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Vijay TVK Udhayanidhi Stalin

தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்த தவெக தலைவர் விஜய் பின்னர் மேடையில் பேசுகையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னாலும் சரி இந்த கொடியை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்.

புயலுக்குப் பின் அமைதி போல, நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது. நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கும் அந்த நாளில், நம்முடைய கொள்கைகள், செயல் திட்டங்களுடன் இந்த கொடிக்கான விளக்கமும் சொல்லப்படும். அதுவரை மகிழ்ச்சியாக, மாஸா, கெத்தா நம்ம கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 'தமிழன் கொடி பறக்குது' எனத் தொடங்கும் கட்சி பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக இரண்டு விரல்களை காட்டியபடி எம்.ஜி.ஆர் நிற்கும் உருவம் பாடலில் இடம் பெற்றுள்ளது. அண்ணா - எம்.ஜி.ஆர் உருவங்களுக்கு இடையே விஜய் நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், விஜய் கட்சியின் கொடி மற்றும் கொடி பாடலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளன. தவெக கொடி, தற்போது சூடான ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு கிளம்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் விஜய் கட்சி கொடி பாடல் இன்று வெளியிடப்பட்டது, அதைப் பார்த்தீர்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி ஸ்டாலின், "நான் பார்க்கலையே.. நிகழ்ச்சியில் இருந்தேன். பார்த்துவிட்டுச் சொல்கிறேன்" என்றார். மேலும், விஜய்க்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+