சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீண்டிய 'அந்த' டிவிட்.. உதயநிதி மீதான கோபம்.. ரஜினியின் பேச்சுக்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்கா!

திமுக மீதும் முரசொலி மீதும் நடிகர் ரஜினிகாந்திற்கு திடீர் என்று ஏற்பட்டு இருக்கும் கோபத்திற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்து.. ரஜினிகாந்த் பரபர பேட்டி - வீடியோ

    சென்னை: திமுக மீதும் முரசொலி மீதும் நடிகர் ரஜினிகாந்திற்கு திடீர் என்று ஏற்பட்டு இருக்கும் கோபத்திற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். முக்கியமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்த சில டிவிட்கள் ரஜினியை பர்சனலாக சீண்டியதாக கூறுகிறார்கள்.

    சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. ரஜினி தனது பேச்சில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை.

    முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம், கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று ரஜினி குறிப்பிட்டார். நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராக இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இணையத்தில் இதனால் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

     இவருக்கு இவ்வளவு தில்லா!.. பாராட்டிய பாஜகவின் தேசிய தலைகள்.. ரஜினியை வைத்து அமித் ஷா ஆடும் கேம்! இவருக்கு இவ்வளவு தில்லா!.. பாராட்டிய பாஜகவின் தேசிய தலைகள்.. ரஜினியை வைத்து அமித் ஷா ஆடும் கேம்!

    என்ன கோபம்

    என்ன கோபம்

    முரசொலிக்கு எதிரான இந்த கருத்துக்கு பின் உதயநிதி மீது ரஜினிக்கு இருக்கும் கோபம்தான் காரணம் என்கிறார்கள். ரஜினிக்கும் உதயநிதிக்கும் இடையிலான சண்டை என்பது சிஏஏ போராட்டத்தில் இருந்துதான் தொடங்கியது. சிஏஏ போராட்டம் குறித்து பேசிய ரஜினிகாந்த், எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழியாகி விடக் கூடாது.

    சிஏஏ போராட்டம்

    தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் எனது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது, என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை திமுகவினர் கடுமையாக கிண்டல் செய்தனர்.

    உதயநிதி பதில்

    இதை உதயநிதி ஸ்டாலினும் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்", என்று கூறினார்.

    சீண்டியது

    சீண்டியது

    இதுதான் ரஜினியை பர்சனலாக சீண்டியது என்று கூறுகிறார்கள். முக்கியமாக உதயநிதி பயன்படுத்திய வயதான பெரியவர்களை என்ற வார்த்தை ரஜினியை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்கிறார்கள். இது தொடர்பாக ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் நேரடியாக ரஜினியிடம் பேசி உள்ளார். சினிமா துறையை சேர்ந்தவர்கள் சிலரும் பேசி உள்ளனர்.

    ஸ்டாலின் விமர்சனம்

    ஸ்டாலின் விமர்சனம்

    ஸ்டாலின் உங்களை விமர்சிப்பது வேறு, உதயநிதி விமர்சிப்பது வேறு. ஸ்டாலின் இப்போதே அமைதியாக உள்ளார். உதயநிதி திமுகக்காரர் என்றாலும் அவர் சினிமாவில் இருக்கிறார். சினிமாவில் இருந்து கொண்டு, உங்களை அவர் இப்படி வயதை சொல்லி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று பலர் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம்.

    ரஜினி கோபம்

    ரஜினி கோபம்

    இதனால்தான் ரஜினி, தன்னுடைய முரசொலி பேச்சை அரங்கேற்றினார் என்று கூறுகிறார்கள். இல்லையென்றால் துக்ளக் விழாவில் முரசொலி குறித்து ரஜினி பேச வேண்டிய அவசியம் வந்து இருக்காது என்றும் கூறுகிறார்கள். ரஜினிக்கு உதயநிதி மீது இருந்த கோபம்தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

    சண்டை மாறுகிறது

    சண்டை மாறுகிறது

    முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ரஜினியை விமர்சிக்கும் போதே ரஜினி இதேபோல் பதில் அளித்து வந்தார். ரஜினியின் புகைப்பட காட்சிகளை ராமதாஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அப்போது ராமதாஸ் vs ரஜினி என்று இருந்த சண்டை தற்போது அதே சண்டை உதயநிதி vs ரஜினி என்று மாறியுள்ளது என்கிறார்கள்.

    மிக கடுமை

    அதன்பின், முரசொலி குறித்த ரஜினியின் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பதில் அளித்து இருந்தார். அவர் தனது டிவிட்டில், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். , என்று குறிப்பிட்டு இருந்தார்.

    என்ன கிண்டல்

    என்ன கிண்டல்

    முரசொலி குறித்த ரஜினியின் பேச்சை, முரசொலி இதழும் கடுமையாக கிண்டல் செய்து இருந்தது. இதற்கு முன்பும் ரஜினியை முரசொலி கடுமையாக பல முறை கிண்டல் செய்து இருக்கிறது. பல முறை ரஜினியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டது. முரசொலி இதழில் வரும் செய்திகளுக்கு பின் உதயநிதிதான் இருக்கிறார். அவர்தான் ரஜினியை கலாய்க்க சொல்கிறார் என்றும் ரஜினி ரசிகர்கள் கூறுகிறார்கள்.

    கோபத்தின் காரணம்

    கோபத்தின் காரணம்

    இதன் காரணமாக கோபம் அடைந்த ரஜினி நேற்று பெரியார் குறித்த தன்னுடைய பேச்சுக்கு ஆதாரங்களை வெளியிட்டார் என்கிறார்கள். பெரியார் மீதும் திமுக மீதும் ரஜினிக்கு பெரிய கோபம் இல்லை. ஆனால் உதயநிதி மீது கோபம் இருக்கிறது. அதைத்தான் அவர் வெளிப்படுத்தி வருகிறார் என்கிறார்கள்.

    மீண்டும் சண்டை

    மீண்டும் சண்டை

    நேற்று ரஜினி பேசியதற்கு உதயநிதி மீண்டும் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். அதில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிக்கு ஒன்றும் தெரியவில்லை. உண்மை தெரியாமல் அவர் எதை எதையோ பேசுகிறார். அவர் தான் பேசியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உண்மை தெரியாமல் பேசும் ரஜினி, தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார். அவர் ஏற்கனவே இப்படி மன்னிப்பு கேட்டு இருக்கிறார், காவிரி விவகாரம் குறித்து முன்பு தவறாக பேசினார். பின் அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். என்று உதயநிதி குறிப்பிட்டார்.

    English summary
    DMK Udhayanidhi Stalin's tweets are one of the reason behind Rajinikanth's angry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X