கணக்கில் வராத ரூ.600 கோடி.. காசா கிராண்ட் நிறுவன ஐடி ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்
சென்னை: காசா கிராண்ட் நிறுவனங்களில் வருமான வரி சோதனையில் ரூ.600 கோடி கணக்கில் வராதது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்தில் கடந்த 3 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஐ.டி சோதனை நடைபெற்று வரும் நிலையில், அப்பாசாமி ரியல் எஸ்டேட், காசா கிராண்ட் நிறுவனம் ஆகியவற்றிலும் சோதனை நடந்து வருகிறது

சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நிர்வாகிகள் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளிடம் ஐ.டி அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர்
மேலும், கோவையில் உள்ள காசா கிராண்ட் இயக்குநர் செந்தில் குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. காசா கிராண்ட் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.600 கோடி கணக்கில் வராதது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாகிராண்ட் வருமான வரி சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ரூ.250 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.












Click it and Unblock the Notifications