3 கணவன்.. 2 காதலன்.. 9 குழந்தைகள்.. இப்போ சோனியா 5 மாத கர்ப்பம்.. போலீசுக்கு தலையே சுத்திடுச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரப் பிரதேசம் ஹர்டோய் மாவட்டம் கங்க்பூர் கிராமத்தில் 37 வயது நரேந்திருக்கு நடந்த கொடுமை இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதி தலையை மொட்டை அடித்து, பாதி மீசையை சவரம் செய்து, கழுத்தில் செருப்பு மாலை போட்டு அவரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த நிலைக்கு நரேந்திர் எப்படி வந்தார் என்பதுதான் இந்த சம்பவத்தின் பின்னணி.. சுருக்கமாக பார்ப்போம்...!!

மெயின்புரியை சேர்ந்த நரேந்திருக்கு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் சோனியா யாதவ் அறிமுகமாகியிருக்கிறார்.

Instagram Marriage

இன்ஸ்டா காதல்

2 பேரும் மெசேஜ் மூலம் 8 நாட்கள் பேசியிருக்கிறார்கள்.. பிறகு கன்னோஜில் நேரில் சந்தித்திருக்கிறார்கள். பழக்கம் காதலாக மாறிய நிலையில், 2 பேரும் ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டார்கள். குடும்பத்தினர் எதிர்த்தாலும் நரேந்திர் சோனியாவுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்.

திருமணமாகி சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆன பிறகுதான் சோனியாவுக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்திருப்பது நரேந்திருக்கு தெரியவந்திருக்கிறது. முதல் கணவர் மூலம் 3 குழந்தைகளும், 2-வது கணவர் முன்னா யாதவ் மூலம் 6 குழந்தைகளும் இருக்கின்றனர். அதாவது சோனியாவுக்கு மொத்தம் 9 குழந்தைகள் இருப்பது பிறகுதான் நரேந்திருக்கு தெரியவந்தது.

Instagram Marriage

40 ஆயிரம் கடன்

கடந்த ஜூலை மாதம் சோனியாவுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறது. அவரது வேண்டுகோளின்படி நரேந்திர் அவரை கௌரிகாட்டில் கொண்டு சென்று விட்டிருக்கிறார். அதற்குப் பிறகும் 2 பேரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். குர்சஹைகஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலிலும் 2 பேரும் பலமுறை சந்தித்திருக்கிறார்கள். சோனியா தன்னிடம் வெவ்வேறு நேரங்களில் ரூ.40 ஆயிரம் வரை கடன் வாங்கியதாகவும் நரேந்திர் சொல்லியுள்ளார்.

இந்த நிலையில் செப்டம்பர் 25-ம் தேதி நரேந்திர் சோனியாவை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது சோனியாவின் செல்போனை பார்த்தபோது, வேறு ஒரு ஆணுடன் அவருக்கு தொடர்பு இருப்பது நரேந்திருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதனால் 2 பேருக்கும் மறுபடியும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, சோனியா 5 மாத கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்டு ஆடிப்போயுள்ளார்.. உடனே உச்சக்கட்ட கோபத்துக்குபோன நரேந்திர், சோனியாவை தாக்கியிருக்கிறார்.

சோனியாவின் 4வது காதலன்

இதை சோனியா எதிர்பார்க்கவில்லை.. உடனே ஆவேசகத்தில், தனது 4-வது காதலனுடன் சேர்ந்து நரேந்திரவை பிணையாக பிடித்துச் சிறை வைத்தார். அத்துடன் நரேந்திரின் தலையில் பாதியை மொட்டை அடித்திருக்கிறார். கத்தரிக்கோல் மற்றும் ரேசரை வைத்து, பாதி மீசையையும் சவரம் செய்திருக்கிறார். கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அவரை அவமானப்படுத்தியிருக்கிறார். நரேந்திர் கைகூப்பி அழுது கெஞ்சியபோதும் அவரை சோனியா விடவில்லையாம்.

அங்கிருந்தவர்களும் நரேந்தருக்கு உதவுவதற்கு பதிலாக இந்த காட்சிகளையெல்லாம் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான பிறகுதான் போலீசாருக்கே இந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் செப்டம்பர் 27-ம் தேதி கங்க்பூர் கிராமத்தில் நடந்திருக்கிறது.

9 குழந்தைகள்

இறுதியில் நரேந்திர் நடந்த சம்பவங்களையெல்லாம் போலீசில் புகாராக கொடுத்திருக்கிறார்.. "சோனியா பல சமயங்களில் என்னிடம் சுமார் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கிவிட்டு தரவில்லை.. என் கல்யாணத்துக்கு முன்பேயே 9 குழந்தைகள் இருப்பதாக சொன்னதுமே அதிர்ச்சியடைந்தேன். பிறகு உடல்நலப் பிரச்சனையை காரணம் காட்டி, கடந்த ஜூலை மாதம் கவுரிகாட்டில் கொண்டுபோய் விட சொன்னார்.. நானும் இறக்கிவிட்டு வந்துவிட்டேன்.

ஆனால், அதற்கு பிறகும் 2 பேரிடம் தொடர்பில் இருந்துள்ளார்.. குர்சஹைகஞ்சில் உள்ள ஒரு ஓட்டலில் பலமுறை அவர்களுடன் சென்றுள்ளார்.. இப்போது 5 மாத கர்ப்பமாகவும் உள்ளார்.. ஆனால் கர்ப்பத்துக்கு காரணம், சோனியாவின் 4-வது கணவர் அல்லது காதலரா என்பது தெரியவில்லை" என்றெல்லாம் புகாரில் கூறியிருக்கிறார்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து, இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ஹர்பால்பூர் சர்க்கிள் ஆபீசர் பிரவீண் குமார் பேசும்போது, நரேந்திருக்கும் சோனியாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.. அந்த பிரச்சனைக்கு பிறகுதான் சோனியாவின் உறவினர்கள் நரேந்திரை பிடித்து தாக்கி, அவரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றெல்லாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது, 9 குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் சோனியா, ஏற்கனவே 2 திருமணங்கள் முடிந்த நிலையில் நரேந்திரை திருமணம் செய்துகொண்டது எப்படி, ரூ.40 ஆயிரம் பண விவகாரம் இந்த பிரச்சனைக்கு எவ்வளவு காரணம் என்பதையும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்களாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+