திருப்பதி - காட்பாடி இடையே “ஜாக்பாட்”.. 104 கி.மீ இரட்டை ரயில் பாதை.. பச்சைக்கொடி காட்டிய கேபினட்!
சென்னை: காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே 104 கி.மீ தொலைவுக்கு இரட்டை ரயில் வழிப்பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் ரூபாய் 1,332 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் மூலம், சுமார் 14 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான இணைப்பு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரட்டை ரயில் பாதை திட்டம் இது திருப்பதி ஏழுமலையான் கோவில், காளஹஸ்தி சிவன் கோயில், காணிபாக்கம் விநாயகர் கோயில், சந்திரகிரி கோட்டை ஆகியவற்றை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, ரூ. 1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ தொலைவிலான ஒற்றை ரயில் வழிப்பாதையானது, இரட்டை வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.
கடந்த வாரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு 18,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில் தற்போது திருப்பதி - காட்பாடி இரட்டை ரயில்பாதை திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து அமைச்சர் அஷ்வினி வைஸ்ணவ் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே, திருப்பதி - காட்பாடி இடையேயான ஒற்றை ரயில் பாதையை ரூ. 1,332 கோடியில் இரட்டை வழிப்பாதையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் மூலம், இந்திய ரயில்வேயின் பாதை 113 கி.மீ அதிகரிக்கும். 400 கிராமங்களைச் சேர்ந்த 14 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இருவழிப் பாதை அமைக்கப்பட்டால் நிலக்கரி, விவசாயப் பொருள்கள், சிமெண்ட் என ஆண்டுக்கு 40 லட்சம் டன் சரக்குகள் கூடுதலாக கையாள முடியும்.
வேலூர் மற்றும் திருப்பதியின் கல்வி மற்றும் மருத்துவ மையங்களுடன் இணைப்பை மேம்படுத்துவதே இந்த புதிய திட்டத்தின் நோக்கம். இந்த இரட்டை ரயில் பாதை திட்டத்தில் ஆந்திரா (சித்தூர், திருப்பதி) வழியாக தமிழகத்திற்கு (வேலூர்) செல்லும் ரயில் பாதையில் 15 நிலையங்கள், 17 பெரிய பாலங்கள், 327 சிறிய பாலங்கள், 7 சாலை மேம்பாலம் , 30 சாலை கீழ் பாலம் ஆகியவை உள்ளன." எனத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications