தமிழ்நாட்டுக்கு ரூ. 4,144 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு.. உ.பி, பீகாருக்கு எவ்வளவுனு பாருங்க!
சென்னை: மத்திய அரசின் நிதி அமைச்சகம், மாநிலங்களுக்கான வரி பகிர்வை இன்று விடுவித்து அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.4 ,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலச் செலவினை கருத்தில் கொண்டு, 10 நாட்கள் முன்பாகவே இந்த தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தமது வரி வருவாயில் கிடைக்கும் நிதியில் குறிப்பிட்ட பகுதியை மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது. நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசுகள் அரசு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதிக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிதியை மாநிலங்கள் தமது வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 10 ஆம் தேதி வழங்கப்படவிருந்த நிதியை 10 நாட்களுக்கு முன்னதாகவே இன்று மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிப்பு. ம.பி., ரூ.7,676 கோடியும் மகாராஷ்டிரா ரூ.6,418 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மத்திய வரிப் பகிர்வில் இருந்து மாநிலங்களுக்கு ரூ. 1,01,603 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியாக விடுவிக்கப்பட்டுள்ள தொகை வருமாறு:
ஆந்திரா - ரூ. 4,112 கோடி
அருணாசல பிரதேசம் - ரூ. 1,785 கோடி
அசாம் - ரூ. 3178 கோடி
பீகார் - ரூ. 10219 கோடி
சத்தீஸ்கர் - ரூ. 3462 கோடி
கோவா - ரூ. 392 கோடி
குஜராத் - ரூ. 3534 கோடி
ஹரியானா - ரூ. 11111 கோடி
இமாச்சல பிரதேசம் - ரூ. 843 கோடி
ஜார்க்கண்ட் - ரூ. 3360 கோடி
கர்நாடகா - ரூ. 3705 கோடி
கேரளா - ரூ. 1956 கோடி
மத்திய பிரதேசம் - ரூ. 7976 கோடி
மகாராஷ்டிரா - ரூ. 6418 கோடி
மணிப்பூர் ரூ. 727 கோடி
மேகாலயா - ரூ. 779 கோடி
மிசோரம் - ரூ. 508 கோடி
நாகலாந்து - ரூ. 578 கோடி
ஒடிசா - ரூ. 4601 கோடி
பஞ்சாப் - ரூ. 1836 கோடி
ராஜஸ்தான் - ரூ. 6123 கோடி
சிக்கிம் - ரூ. 394 கோடி
தமிழ்நாடு - ரூ. 4144 கோடி
தெலங்கானா - ரூ. 2136 கோடி
திரிபுரா - ரூ. 719 கோடி
உத்தரப் பிரதேசம் - ரூ. 18,227 கோடி
உத்தரகாண்ட் - ரூ. 1136 கோடி
மேற்கு வங்கம் - ரூ. 7644 கோடி
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications