Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடங்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்? நிதி ஒதுக்காத மத்திய அரசு.. ஆர்டிஐயில் அம்பலமான ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் கூறியது. ஆனால் சென்னையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட கொச்சி, பெங்களூர், நாக்பூர் போன்ற பிற மாநில மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு சென்னைக்கு மட்டும் நிதி ஒதுக்காதது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

Union Govt Not Allocated Funds For Chennai Metro Rail Second Phase Project Reveals in RTI

சென்னை மெட்ரோ ரயில்: 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் நினைத்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும் என்பதால் பயணிகள் மத்தியில் மெட்ரோ ரயிலுக்கு தற்போது அமோக வரவேற்பு உள்ளது. பீக் நேரங்களில் மின்சர ரயில்களை போல பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மெட்ரோ ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.

பட்ஜெட்டில் அறிவிப்பு: பயணிகள் வரவேற்பு காரணமாக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளை இணைக்கும் விதமாக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

118.9 கிலோமீட்டர் தூரம் கொண்ட சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ரூபாய் 63 ஆயிரத்து 746 கோடி நிதி ஒதுக்கப்படும் என கடந்த 2021-2022 ஆம் பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது.

நிதி ஒதுக்கவில்லை: சென்னை மெட்ரோ ரயிலுடன் சேர்த்து பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 14 ஆயிரத்து 788 கோடி ரூபாய் நிதி மற்றும் கொச்சி மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு 1,957 கோடி ரூபாய் நிதியும், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 5 ஆயிரத்து 976 கோடி ரூபாய் நிதியும் வழங்கப்படும் என பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தான் சென்னையை தவிர ஏனைய மூன்று ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. கொச்சி, பெங்களூர், நாக்பூர், மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக 18 ஆயிரத்து 978 கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்துள்ளது.

மற்ற நகரங்களுக்கு ஒதுக்கீடு: கொச்சி மெட்ரோ ரயில் பணிகளுக்காக 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், நாக்பூர் மெட்ரோ பணிகளுக்காக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் மத்திய அரசு நிதி அளித்துள்ளது. ஆனால் சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+