பாஞ்சாகுளம் விவகாரம்..பள்ளிகளில் சாதிய பாகுபாடு..நடவடிக்கை பாயும்..அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனையின் போது சாதியை சொல்லி ஒரு பிரிவினர் திட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் பட்டியலின மக்களை தக்கியதாக 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து ஒரு பிரிவு ஊர் சமுதாய மக்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்த முடிவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் கடைகளில் கொடுக்கக் கூடாது எனவும் தீர்மானம் போடப்பட்டதாக தெரிகிறது.

 பெட்டிக்கடையில் தீண்டாமை

பெட்டிக்கடையில் தீண்டாமை

பாஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பு பள்ளிக்கூட மாணவர்கள் தின்பண்டம் உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்றனர். அப்போது அவர்களுக்கு பொருட்களை வழங்க மறுத்த மகேஸ்வரன், அதனை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளார்.

2 பேர் கைது

2 பேர் கைது

இது சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை அடுத்து அந்த கிராமத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் அந்த கடைக்கு சீல் வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் கடை உரிமையாளர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க்

தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க்

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் முக்கிய பிரிவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும், அந்தப் பிரிவின் படி நடவடிக்கை எடுத்தால் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ ஊர்க்குள் வர அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் உபயோகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விஏஓ விடுவிப்பு

விஏஓ விடுவிப்பு

அதேபோல், பாஞ்சாங்குளம் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா என்பவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், பாஞ்சாங்குளம் கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு

பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு

இதனிடையே பள்ளியில் சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக சொல்லப்பட்ட பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இன்று திறக்கப்பட்டது. இப்பள்ளியில் 23 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் கூறியதைப் போன்று எந்த வித சாதிய பாகுபாடும் பார்க்கவில்லை எனவும், பள்ளியின் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சமமாகவே நடத்தி வருகின்றனர் எனவும், பள்ளியை ஆய்வு செய்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இதனிடையே சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தென் மாவட்டங்களில் கல்வியறிவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+