ஆதார் கார்ட் விதிகளில் வந்தது அதிரடி மாற்றம்.. மொத்தமாக எல்லாமே மாறிடுச்சே.. இதை நோட் பண்ணுங்க
சென்னை; இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI தற்போது ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்புகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. மொத்தமாக செயல்முறையை எளிதாக்கும் நோக்கத்தில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. விதிகள் தகவல்களைப் புதுப்பிப்பதற்கான இரண்டு முறைகளை வழங்குகின்றன:
̥ஏற்கனவே இருந்த ஆதார் ஃபார்ம்கள் மாற்றப்பட்டு உள்ளன. ஆதார் பதிவு செய்ய இனி புதிய ஃபார்ம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆதார் புதுப்பிக்கவும் இனி புதிய ஃபார்ம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் வசிப்பவர்களுக்கு ஒரு ஃபார்ம் , வெளி நாட்டில் உள்ள என்ஆர்ஐகளுக்கு ஒரு ஃபார்ம் என்று புதிய மாற்றம் வந்துள்ளது. இதன் மூலம் இனி எளிதாக ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய முடியும் என்கிறார்கள்.
சில ஆதார் விவரங்களை முன்னர் நேரில் மட்டுமே மாற்ற முடியும், சில ஆதார் விவரங்களை ஆன்லைன் சென்று மட்டுமே மாற்ற முடியும் என்று இருந்தது. இனி அப்படி இல்லை. இனிமேல் போன் எண்களை கூட ஆன்லைன் மூலம் எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.
என்ன மாற்றம்: இனி தனிநபர்கள் ஆதார் மாற்றங்களை செய்ய நேரடியாக ஆதார் பதிவு மையத்தைப் பார்வையிடலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம்/மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். இதற்கு முந்தைய 2016 விதிகளின் படி ஆன்லைன் புதுப்பிப்புகளைக் ஆன்லைனில் மட்டுமே செய்ய முடியும். ஆதார் விவரங்களுக்கு வேறு ஏதேனும் புதுப்பிப்புகள் இருந்தால், பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும் என்று விதிகள் இருந்தன.
இனி வரும் நாட்களில் எந்த மாதிரியான மாற்றங்களையும் ஆதார் மையம், ஆன்லைன் இரண்டிலும் செய்தி கொள்ள முடியும்.
ஆதார் விவரங்களை திருத்த கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இணையதளம் மூலம் இலவசமாக திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி வரை விவரங்களைத் திருத்தலாம். இன்றோடு கால அவகாசம் முடியும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மாதம்தான் அதற்கான கடைசி வாய்ப்பு . டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது.
ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
ஆதார் மாற்றம்: உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். இனி மார்ச் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.












Click it and Unblock the Notifications