தமிழ்நாட்டை நோக்கி திருப்பிய ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதல்முறை.. சர்ப்ரைஸ் ஆக வந்த ₹5600 கோடி முதலீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் சோலார் (First_Solar) நிறுவனம் தமிழ்நாட்டில் ₹5600 கோடி முதலீடு என்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தமிழ்நாட்டு அரசு எடுக்கும் விட முயற்சி இந்தியாவில் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. தமிழகம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்ற இலக்குடன் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

US company First Solars ₹5600 crore investment in Tamil Nadu : Praise for MK Stalin

தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை விருந்தினராக பங்கேற்றார். முதலீட்டாளர்களை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார்.

இந்த மாநாட்டில் சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் பங்கேற்றுள்ளன. இன்று முதல 2 நாட்கள் மாநாட்டில் 26 அமர்வுகள் நடைபெறுகிறது. 170-க்கும் மேற்பட்ட உலக புகழ் வாய்ந்த பேச்சாளர்கள் இதில் பேசுகிறார்கள்.

US company First Solars ₹5600 crore investment in Tamil Nadu : Praise for MK Stalin

தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள தொழில் சூழல்கள் பற்றி தனி அரங்குகளை அமைத்திருக்கிறது. இதில் சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றிற்கும் தனித்தனி அமர்வுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாநாட்டில் 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மின்சாரம் மற்றும் சோலார் பேனல் தொடர்பான நிபுணரான பாலு வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹5600 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த முதலீடு மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சி இந்தியா லெவலில் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இன்னும் வரும் காலங்களில் பல வெளிநாட்டு சூர்ய மின்சக்தி தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் முதலீடு தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கான சூழலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு ஃபர்ஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹5600 கோடி முதலீடு என்பதே சாட்சி" இவ்வாறு கூறியுள்ளார்.

இது ஒருபுறம் எனில், முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆகி உள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளது. இவ்வகையான நிபந்தனை உலகிலேயே முதன்முறை என தொழிற்துறையினர் பாராட்டுகிறார்கள்.

இதனிடையே பெகாட்ரான் இந்தியா பிரைவேட் லிமிடெட் தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனம் 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+