மக்களே உஷார்.. இந்தியாவில் பரவும் உருமாறிய கொரோனா ஆபத்தானது.. தடுப்பூசி செயல்திறன் குறைவு- WHO தகவல்
ஜெனீவா: இந்தியாவில் காணப்படும் உருமாறிய B.1.617 வகை கொரோனா ஆபத்தானது மற்றும் வேகமாக பரவக் கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் வாராந்திர அப்டேட்டில் தெரிவித்துள்ளது.
B.1.617 வகை வைரஸ் இந்தியாவில் முதன்முதலில் அக்டோபரில் கண்டறியப்பட்டது. இப்போது 44 நாடுகளில் காணப்படுகிறது. இது அதிக பரவும் விகிதத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஆன்டிபாடிகளுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுகிறது.

இந்தியாவில் கோவிட்-பாசிட்டிவ் மாதிரிகளில் சுமார் 0.1 சதவீதம் மரபணு மாறிய வைரசால் பாதிக்கப்பட்டவை என்கிறார்கள்.
WHO அறிக்கைப்படி, இங்கிலாந்தில் காணப்படும் B.1.17 வைரஸ் மற்றும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் B.1.617 ஆகியவை "சமீபத்திய வாரங்களில் குறையத் தொடங்கியுள்ளன", ஆனால் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால்,, B.1.617 வைரசின் ஆபத்தான உருமாற்றம் இப்போதும் உள்ளது. இந்தியாவில் காணப்படும் உருமாறிய B.1.617 வகை கொரோனா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு வேகமாக பரவக்கூடியது என்று ஹூ தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட ஆய்வுகளில் B.1.617.1 மற்றும் B1.617.2 ஆகியவை கணிசமாக அதிக பரவல் விகிதத்தைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.
சில ஆய்வுகள் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனாவுக்கு எதிராக குறைவான செயல்திறனை காட்டியுள்ளன என்று கூறும் WHO, மேற்கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளதாக கூறியுள்ளது.
தடுப்பூசி போட்டிருந்தாலும், இந்திய மக்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது இந்த அறிக்கையின் சாராம்சமாக பார்க்கப்படுகிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications