சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓஎன்வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவிப்பு.. கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம்

Google Oneindia Tamil News

சென்னை: ஓ. என்.வி இலக்கிய விருதைத் திருப்பித் தருவதாகவும், அந்த பரிசுத்தொகையுடன் கூடுதலாக 2 லட்சம் ரூபாயை போட்டு, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும், கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

Recommended Video

    ஓஎன்வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவிப்பு.. கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம்

    இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு

    கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது: நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.

     சர்ச்சைக்கிடையே விருது வேண்டாம்

    சர்ச்சைக்கிடையே விருது வேண்டாம்

    ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.
    அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.

    உண்மையை உரச வேண்டாம்

    உண்மையை உரச வேண்டாம்

    ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

     விருதை திரும்ப கொடுக்கிறேன்

    விருதை திரும்ப கொடுக்கிறேன்

    ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி. கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

    கூடுதலாக 2 லட்சம்

    கூடுதலாக 2 லட்சம்

    மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.

    ஸ்டாலினுக்கும், உலக தமிழருக்கும் நன்றி

    ஸ்டாலினுக்கும், உலக தமிழருக்கும் நன்றி

    இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும். ஊடக உறவுகளுக்கும் என் நன்றி.

    English summary
    Poet Vairamuthu has said that, he will not recieve ONV award and give two lakhs more to the Kerala government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X