பிடர் கொண்ட சிங்கமே பேசு.. 2018ல் கருணாநிதி முன் வாசித்த கவிதை வீடியோவை மீண்டும் வெளியிட்ட வைரமுத்து
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வாசித்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
Recommended Video
முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்தார். அவரது 4 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவிடம் கடல் அலை போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக மூத்த தலைவர்கள் என மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அது போல் தமிழகம் முழுவதும் பல்வேறு பிரபலங்கள் கருணாநிதிக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கருணாநிதி முன்பு கவிதை
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து கடந்த 2018ஆம் கருணாநிதியை நேரில் சந்தித்து அவர் முன் தான் கவிதை வாசித்த வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார். வைரமுத்து கவிதையை வாசிக்க அதை கருணாநிதி ரசித்த படியே கேட்ட வீடியோவை கண்டு பலரும் நெகிழ்கிறார்கள்.

அந்த கவிதையில் இருப்பது:
பிடர் கொண்ட சிங்கமே பேசு
இடர்கொண்ட தமிழ்நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து
யாதொன்றும் கேட்கமாட்டேன்
யாழிசை கேட்கமாட்டேன்
வேதங்கள் கேட்கமாட்டேன்
வேய்க்குழல் கேட்கமாட்டேன்
தீதொன்று தமிழுக் கென்றால்
தீக்கனல் போலெழும்பும்
கோதற்ற கலைஞரே
நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்
இடர்கொண்ட தமிழர் நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து... என அந்த கவிதை உள்ளது.

கருணாநிதி நினைவிடம்
கருணாநிதியின் நினைவிடத்தில் அவருக்கு பிடித்த பொருளான பேனாவுக்கு சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்கள். கருணாநிதியின் பேனாவுக்கு மக்களிந் வரிப் பணத்தில் சிலை வைப்பதா என்ற கேள்வி எழுகிறது.

பேனா சிலை
அது போல் கடற்கரையில் அத்தகைய உயரத்தில் பேனாவுக்கு சிலை வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைத் தெரிவிக்கிறார்கள். இது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. படேலுக்கு சிலை வைத்தது குறித்து திமுகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications