நாட்படு தேறல் 2ஆம் பாகம்.. பங்களிப்பு செய்த கலைஞர்கள் யார்? கவிஞர் வைரமுத்து தந்த அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பாகம் பாட்டுத் தொடர் கலைஞர் தொலைகாட்சி மற்றும் இசையருவியில் ஒளிபரப்பாகிறது.

இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஏப்ரல் 17 ஞாயிறு முதல்
கலைஞர் தொலைக்காட்சி
மற்றும்
இசையருவியில்

நாட்படு தேறல்
இரண்டாம் பருவம்

எங்கள்
மதிப்புமிகு இயக்குநர்கள்

என குறிப்பிட்டுள்ள வைரமுத்து, இயக்குநர்கள் படை என்ற பெயரில் 12 இயக்குநர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.

 இயக்குநர்கள் பெயர்கள்

இயக்குநர்கள் பெயர்கள்

அவர்கள் காந்தி கிருஷ்ணா, சரண், சிம்புதேவன், பரதன், ஷரவணன் சுப்பையா, எம். மணிகண்டன், விருமாண்டி, கணேஷ் விநாயகன், விக்ரம் சுகுமாரன், ரமேஷ் தமிழ்மணி, தளபதி பிரபு, ராதிகா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

நாட்படு தேறல்

நாட்படு தேறல் என்ற தலைப்பில் வைரமுத்து 100 பாடல்களை உருவாக்கியுள்ளார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குநர்கள், 100 பாடகர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு பாடல் வீதம் நாட்படு தேறலின் முதல் பாகம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது.

 13 பாடல்கள்

13 பாடல்கள்

இந்த நிலையில் 13 பாடல்களுடன் நாட்படு தேறலின் இரண்டாவது பாகம் கலைஞர் டிவி, இசையருவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் இந்த பாடல்கள் ஞாயிறுதோறும் என 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகும்.

 இசையமைப்பாளர்கள்

இசையமைப்பாளர்கள்

நாட்படு தேறல் இரண்டாம் பருவத்தில், வித்யாசாகர் - யுவன்சங்கர் ராஜா - ஜி.வி.பிரகாஷ் - ரமேஷ் விநாயகம் - அனில் சீனிவாசன் - ஜெரார்ட் பெலிக்ஸ் - நெளபல் ராஜா - அவ்கத் - வாகு மசான் - இனியவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் -ஹரிஹரன் - சங்கர் மகாதேவன் - பாம்பே ஜெயஸ்ரீ - விஜய் யேசுதாஸ் - ஹரிணி - கல்பனா ராகவேந்தர் - பென்னி தயாள் - ஹரிசரண் - அந்தோணி தாசன் - வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பாடகர்களும், காந்தி கிருஷ்ணா - சரண் - பரதன் - சிம்புதேவன் - சரவண சுப்பையா - காக்கா முட்டை மணிகண்டன் - விருமாண்டி - கணேஷ் விநாயம் - விக்ரம் சுகுமாரன் - தளபதி பிரபு - ரமேஷ் தமிழ்மணி - ராதிகா உள்ளிட்ட இயக்குநர்களும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.

 தாய்மொழி

தாய்மொழி

"எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்ததில் திரைப்பாட்டுக்குப் பெரும் பங்கிருக்கிறது. இன்று உலகமெங்கும் திரைப்படத்தில் தாய்மொழி குறைந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ் கற்றுக் கொடுக்கும் பாடல்களாக ஆல்பங்கள் தயாரிக்கப்பட வேண்டியிருக்கின்றன. ஒரு தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் கடமையை நாட்படு தேறல் ஆற்றும்; ஆற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

 ஒத்துழைக்கும் கலைஞர்களுக்கு நன்றி

ஒத்துழைக்கும் கலைஞர்களுக்கு நன்றி

என்னோடு ஒத்துழைக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. தகுதிமிக்க ஆதரவாளர்களால்தான் இது சாத்தியமாகிறது; அவர்களை நான் மறக்க மாட்டேன். நாட்படு தேறல் என் சமகாலத்தில் வாழும் உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை" என்றார் கவிஞர் வைரமுத்து. முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே உற்சாகத்தில் உள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+