சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆண்டுக்கொரு நாள் கொண்டாடுவது வெளிநாட்டு பழக்கம்.. காதலொன்றில்லாத நாளுண்டா நமக்கு?.. வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: இன்று காதலர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார்.

இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் பிரசித்தி பெற்ற இந்த கொண்டாட்டம் நம் நாட்டிலும் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்பை பரிமாறி கொள்ள காதலர்கள் பரஸ்பரம் பரிசுப் பொருளை வாங்கித் தருவது வழக்கம். கடந்த முறை கொரோனா தொற்றால் காதலர் தினம் பெரும்பாலான பகுதிகளில் கொண்டாடப்படவில்லை.

Vairamuthu writes poem about Valentines day

இந்த ஆண்டு தொற்று குறைந்துவிட்டதால் காதலர் தினம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ஆண்டில் ஒருநாள்
காதலை மதிப்பது
மேனாட்டார் பழக்கம்.

வாழ்வே காதலாய்
வாழ்ந்து கழிவதே
நம்நாட்டார் வழக்கம்.

காதலொன்றில்லாத
நாளுண்டா நமக்கு?
#காதலர்தினம்

என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது வருஷத்தில் ஒரு நாள் கொண்டாடுவது வெளிநாட்டினர் பழக்கம். ஆனால் வாழ்க்கையையே காதலாக வாழ்ந்து கொண்டாடுவது நம் நாட்டினர் பழக்கம். காதல் இல்லாத நாள் நமக்கு ஏது என கேட்டுள்ளார்.

English summary
Lyricist Vairamuthu says about Valentine's day by comparing the celebration in both foreign countries and India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X