சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போட்டி தேர்வுகளே வேண்டாம்ன்னா.. 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளையும் ஒழித்துவிடலாம்.. வானதி ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் போன்ற தேர்வுகள் வேண்டாம் என்றால் 10, 12ம் வகுப்பு தேர்வுகளை கூட ஒழித்து விடலாம் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வை நடத்த தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது. அந்த எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தேர்வை நடத்திக் கொண்டுதான் வருகிறது.

நேற்று முன் தினம் நடத்தப்பட்ட நீட் தேர்வின் போது சேலம் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதன் மூலம் தமிழகத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

நீட் தேர்வை முன்மொழிந்தது யாரு?.. வானதி கேட்ட கேள்விக்கு கட்டாயமாக்கியது யாருனு கேட்ட நெட்டிசன்கள் நீட் தேர்வை முன்மொழிந்தது யாரு?.. வானதி கேட்ட கேள்விக்கு கட்டாயமாக்கியது யாருனு கேட்ட நெட்டிசன்கள்

நீட் விலக்கு மசோதா

நீட் விலக்கு மசோதா

திமுகவின் தேர்தல் அறிக்கையான நீட் விலக்கு மசோதா நேற்றைய தினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை திமுக தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. அதை நிறைவேறும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மாணவர் சேர்க்கையில் 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற சட்ட முன்வடிவை முன்மொழிந்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை

மாணவர்களின் எண்ணிக்கை

நீட் தேர்வால் நிறைய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக நியாயப்படுத்தும் பாஜக, அந்த தேர்வால் இறந்த மாணவர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே நீட் விலக்கு மசோதாவுக்கு சட்டசபையில் உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும் என கூறி தீர்மானத்தை நிறைவேற்றினார். பாஜக வெளிநடப்பு செய்தனர்.

Recommended Video

    நீங்க தலைகீழாக நின்னாலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும்.. பாஜக அண்ணாமலை
    ஸ்டாலின் கொண்டு வந்த மசோதாவுக்கு ஆதரவு

    ஸ்டாலின் கொண்டு வந்த மசோதாவுக்கு ஆதரவு

    இதையடுத்து ஸ்டாலின் கொண்டு வந்த மசோதாவை அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் கொண்டு வந்த மசோதா ஒரு மனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த நிலையில் நீட் போன்ற தேர்வுகளால்தான் ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் இடம்பெற ஏதுவாக இருக்கிறது என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார்.

    வானதியின் பேஸ்புக் பதிவு

    வானதியின் பேஸ்புக் பதிவு

    இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் போட்டித் தேர்வுகளே கூடாது என்றால் காவலர் பணிக்கான தேர்வு, ஆசிரியர் பணிக்கான தேர்வு, வங்கி தேர்வு என்று பல்வேறு தேர்வுகளை எழுதி தான் ஒரு குறிப்பிட்ட துறைக்கு வேலைக்கு செல்கிறார்கள். தேர்வு வேண்டாம் என்றால் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளை கூட ஒழித்து விடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    BJP MLA Vanathi Srinivasan angry over neet exemption bill and says that if no competitive exams means we can eradicate SSLC and Plus 2 exams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X