Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வண்டலூருக்கு வசதி.. கிளாம்பாக்கத்துக்கு ஈஸி ரூட்.. ஊரப்பாக்கம் டூ வண்டலூர் 400 மீ ரயில் பாதை! ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பக்கம் ரயில் நிலையத்திலிருந்து ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல, ஆகாய நடைமேடை அமைக்கம் பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை.. ஆகாய நடைமேடை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளில் நிலவும் சிக்கல்கள் எப்போது விலகும் என்றும் தெரியவில்லை.. ஆனால், ஊரப்பாக்கம் - வண்டலூர் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியும் துரிதமாகி கொண்டிருக்கிறது. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

Vandalur Urapakkam Kilambakkam bus stand

எனினும், நெரிசல் அதிகமாக உள்ள நிலையில், பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இப்போது பிளாட்பார்ம் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆகாய நடைமேடை

கிளாம்பக்கம் ரயில் நிலையத்திலிருந்து ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல, ஆகாய நடைமேடை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலமும் கையகப்படுத்தப்பட்டு, அந்த பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ரூ.70 கோடி மதிப்பில், 1,110 மீட்டர் தூரத்துக்கு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது கட்டி முடிக்கப்பட்டுவிட்டால், கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, பஸ் ஸ்டாண்டுக்கு சிரமமின்றி வரலாம்.

அதேபோல, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, ரயில்வே ஸ்டேஷன் செல்ல வேண்டுமானாலும் பயணிகள் எளிதாக செல்லலாம்.. சென்னை- திருச்சி ஹைவேஸில் ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய அவசியம் இருக்காது..

மேம்பாலம் - நிலம் கையகப்படுத்துதல்

ஆனால், இந்த நடை மேம்பாலத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் நிலவிவருவதாக தெரிகிறது. அதாவது, கிளாம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.. ஆனால், மேம்பாலத்திற்கு சொந்தமான நிலத்தை வழங்க ரூ.350 கோடி தங்களுக்கு வழங்க வேண்டும் என நில உரிமையாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.. இது தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால், நிலத்தின் சந்தை மதிப்பே வெறும் 60 கோடிதானாம்.. நடைமேம்பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பு ரூ.70 கோடி என்ற நிலையில், ஒரு ஏக்கர் 45 சென்ட் நிலத்திற்கு, 350 கோடியை நில உரிமையாளர் கேட்பதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்து இதுவரை திடமான முடிவு எட்டப்படவில்லை.

வண்டலூர் புதிய ரயில் நிலையம்

இதனிடையே, ஊரப்பாக்கம் - வண்டலூர் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியும் துரிதமாகி கொண்டிருக்கிறது.. கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய திட்டத்தின் ஒரு பகுதியாக வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே 400 மீட்டர் நீளத்திற்கான ரயில்வே பாதை அமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.

பழைய தண்டவாளம்

3 நடைமேடைகளுடன் 12 பெட்டிகள் கொண்ட ரயில் நிறுத்தும் வசதியுடன் இது அமைகிறது. ரயில் நிலையப்பணி சுமார் 60 சதவீதம் முடிந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில், ஊரப்பாக்கம்-வண்டலூர் இடையே ரயில்கள் வந்து செல்ல வசதியாக பழைய தண்டவாளத்தை 2 மீட்டர் தூரத்திற்கு நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. எனினும் ஊரப்பாக்கம் - வண்டலூர் இடையே தண்டவாளத்தை நகர்த்துவதில் சிரமம் உள்ளதால், சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பமாகியிருக்கிறது..

ஊரப்பாக்கம் மேம்பாலத்தின் அடியிலிருந்து வண்டலூர் சிவன் கோயில் வரை தண்டவாளம் புதிதாக அமைக்கப்படுகிறது. இந்த பணி முடிந்ததுமே, அந்த பகுதியிலுளள பழைய தண்டவாளம் துண்டித்து எடுக்கப்பட்டு புதிதாக அமைக்கப்படும் தண்டவாளத்துடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பயணிகளுக்கு மகிழ்ச்சி

வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே 400 மீட்டர் நீளத்திற்கான ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டால், பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும்.. கிளாம்பாக்கத்திலிருந்து நகருக்குள் பயணிப்பதற்கும், நகரிலிருந்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதற்கும் இணைப்பு வசதிகள் மேம்படும். இதனால் எம்டிசி பஸ்களுக்கு காத்திருக்க தேவையில்லை, கூட்ட நெரிசலும் இருக்காது.. கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட கேப்களில் போக வேண்டிய தேவை இருக்காது என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+