சாதாரண வந்தே பாரத்.. வரவேயில்ல, அதுக்குள்ளயே ஏறுது டிமாண்டு.. சென்னை டூ கன்னியாகுமரிக்கு குட்நியூஸ்?
சென்னை: சாதாரண் வந்தே பாரத் இன்னும் சேவையை இங்கு முழுமையாக துவங்காத நிலையில், அதற்குள் அதற்கான டிமாண்டு எகிறி வருகிறது. இது தொடர்பான கோரிக்கையும் தென்னகத்தில் இருந்து, இப்போதே ஒலிக்க துவங்கியிருக்கிறது.
நெல்லை வந்தே பாரத் ரயில் மீதான வரவேற்பு தமிழகத்தில் அதிகரித்தபடியே வருகிறது. அதேசமயம், இந்த நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை, நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை என இயக்கினால் கூடுதல் பலனாக இருக்கும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.,,

கன்னியாகுமரி: ஒரு ரயில் கூட குமரி மாவட்டத்துக்கு, திருநெல்வேலி, மதுரை வழியாக பயணம் செய்யும் விதத்தில் இதுவரை அறிவிக்கப்படவில்லையாம்.. அதனாலேயே, இந்த சேவையை விரிவுபடுத்த கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.,,
சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிப்பதுடன், தென் தமிழகத்தின் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெறலாம் என்று காங்கிரஸ் எம்பி விஜய் வசந்ததும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், சாதாரண வந்தே பாரத் குறித்த கோரிக்கை ஒன்று இப்போதே வலுப்பெற்று வருகிறது.. வந்தே சதரன் என்று சொல்லப்படும் சாதாரண வந்தே பாரத் ரயில் மீது தற்போது பயணிகளின் கவனம் திரும்பியிருக்கிறது.. சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில்களின் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், முதல் ரயிலும் ரெடியாகிவிட்டது..
அரக்கோணம்: உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள ஆர்டிஎஸ்ஓ எனப்படும், ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே மணிக்கு, 130 கி.மீ. வேகத்தில் இயக்கி, இந்த சாதாரண் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இந்த புதிய ரயில் ஆமதாபாத் - மும்பை இடையே இயக்கலாம் என்கிறார்கள்.. இதற்கான, சோதனை ஓட்டமும் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது சாதாரண் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், இந்த ரயிலை சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே இயக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளதாம்.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கத்தினர் சொல்லும்போது, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது என்றாலும், அதற்கேற்றார்போல், போதுமான அளவுக்கு ரயில் போக்குவரத்து வசதி கிடையாது. அதனால்தான், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
சாதாரண் வந்தே பாரத்: சென்னை - திருநெல்வேலி இடையே தற்போதுள்ள வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், சென்னையில் இருந்து தென்மாவட்ட தடத்தில் சாதாரண் வந்தே பாரத் ரயிலை இயக்கினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தெற்கு ரயில்வேக்கும் கூடுதல் வருவாய் அதிகளவில் கிடைக்கும்" என்றனர்.
இந்த சாதாரண வந்தே பாரத் ரயிலானது, 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளை கொண்டது.. சுமார் 1800 பயணிகள் இதில் பயணிக்க முடியும்... படுக்கை வசதிகளுடன் விளக்குகளும், ஃபேன்கள், சுவிட்சுகள், பேனல்கள், எல்இடி விளக்குகள் நவீன வடிவில் பொருத்தப்பட்டுள்ளன..
எதிர்பார்ப்பு: ஒவ்வொரு ரயில் பெட்டியும் நிரந்தர கப்ளர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், பெட்டிகள் பிரிந்து செல்வதற்கு வாய்ப்பு இருக்காது.. ரயில் நிற்கும்போது ஏற்படும் அதிர்வுகளை பயணிகள் உணர முடியாது.. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது என்பதால், இந்த ரயில் மீதான எதிர்பார்ப்பு கூடியபடியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications