சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாணிஜெயராம் அதை மறக்கலயே.. கிளாஸுக்குள் நுழைந்து.. "வேலூர் வாணி"யின் நினைவை தாங்கும் ஈவேரா கரும்பலகை

வாணி ஜெயராம் தாம் படித்த வேலூர் ஈவேரா பள்ளிக்கு சென்று தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டாராம்

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல பாடகி வாணிஜெயராம், சில வருடங்களுக்கு முன்பு, வேலூரில் தான் படித்த பள்ளிக்கு சென்று, கரும்பலகையில் பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாடகி வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் திடீரென்று மரணம் அடைந்தார். அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போஸ்ட் மார்ட்டம் முடிவில், வாணிஜெயராமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது... படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயர மேஜை மீது அவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

30 குண்டுகள் முழங்க உடல் தகனம்.. மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை30 குண்டுகள் முழங்க உடல் தகனம்.. மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை

 நெற்றியில் காயம்

நெற்றியில் காயம்

இதனால், அவரது நெற்றியிலும் மற்றும் மேஜையின் விளிம்பிலும் ரத்தக்கறைகள் இருந்தது என்றும் தடயவியல் நிபுணர் சோதனையில் உறுதி செய்யப்பட்டது. வாணி ஜெயராம் இறந்த நேரத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை எடுத்து பார்த்த போது, அவர் இறப்பதற்கு முன்பும் இறந்த பிறகு, அவரது வீட்டிற்கு யாரும் வந்து சென்றதாக எந்த சிசிடிவி பதிவுகளும் இல்லை. அதனால், தடயவியல் துறை மற்றும் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில், வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

 விலகிய மர்மம்

விலகிய மர்மம்

பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மாநகர காவல்துறை தடயவியல் துறை மற்றும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கைகளின் முற்றுப்புள்ளி வைத்தனர்.. இதையடுத்து வாணி ஜெயராம் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 3 தேசிய விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகள் பெற்றுள்ள வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறை மரியாதையுடன் நேற்று வாணி ஜெயராம் இறுதிச்சடங்கும் நடந்து முடிந்தது.

 வேலூர் வாணி

வேலூர் வாணி

வேலூரை சேர்ந்த வாணிஜெயராம், வேலுார் கொசப்பேட்டை நல்லெண்ண பட்டறை தெருவில், தன்னுடைய சிறு வயதில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்... அந்த பகுதியில் உள்ள ஈவெரா அரசு பள்ளியில்தான் இவர் படித்துள்ளார்.. கலைவாணி என்ற பெயருடன் தன்னுடைய ஆரம்பக்கல்வியையும் பயின்றுள்ளார். அதற்கு பிறகுதான், இசைக்குயில் வாணி ஜெயராமாக அழைக்கப்பட்டார்... தேசம் முழுதும் அறியப்பட்டு, புகழின் உச்சிக்கு சென்றிருந்த நிலையிலும், தான் படித்த பள்ளியை வாணி ஜெயராம் மறக்கவே இல்லை.. தான் தொடக்க கல்வி படித்த பள்ளியை நினைவில் கொண்டிருந்த வாணிஜெயராம், 2015-ம் ஆண்டு பள்ளிக்கு வருகை தந்துள்ளார்.

 கலைவாணி

கலைவாணி

அப்போது, பள்ளி வளாகத்தில் விளையாடிய இடங்கள், தான் படித்த கிளாஸ்ரூம்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, தன் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்... அதுமட்டுமல்ல, தான் படித்த கிளாஸ்ரூமில் உள்ள கரும்பலகையிலும், பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்தார்... தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு ஆசிரியர்களுடன் குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டு மகிழ்ந்துள்ளார்.. மக்களின் மனதை தன் இனிய குரலால் மயக்கிய கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைந்தாலும், இந்த பள்ளியில் படித்த அவரின் சிறப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும் என்று நெகிழ்ந்து சொல்கிறார்கள்.

English summary
vanijayaram studied in a evr government school and old memory in writing on classroom blackboard
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X