பாவம் அந்த காயத்ரி ரகுராம்! திருச்சி சூர்யா என்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.. மதுரை வரிச்சியூர் செல்வம்

காயத்ரி ரகுராமுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது- வரிச்சியூர் செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காயத்ரி ரகுராம் யாரென்றே எனக்கு தெரியாது, அவங்களை என் வாழ்நாளில் ஒரே முறைதான் பார்த்துள்ளேன் என மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கலைஞர் அய்யா என்றால் கண்ணாடி, எம்ஜிஆர் என்றால் தொப்பி, வரிசியூர் செல்வம்னா நகை.

நான் நகை இல்லாமல் போனேன் வைங்க என் கூட யாரும் போட்டோ கூட எடுக்க மாட்டாங்க, அப்படி வாழ்ந்து நான் என்ன செய்ய போறேன். நான் என்ன ஆயிரம் ஆண்டா வாழ போறேன்.

வரிச்சியூர் செல்வம்

வரிச்சியூர் செல்வம்

விமர்சனங்கள் வந்தாலும் வரிச்சியூர் செல்வம் இப்படித்தான் இருப்பேன். என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன். தூங்கும் போது நகையை கழற்றி வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். விமானத்தில் பயணித்தாலும் நகைகளுடன்தான் பயணிப்பேன். உள்ளே போனாலும் நான் நகைகளை கழற்ற மாட்டேன். நான்தான் வரி கட்டிக் கொண்டிருக்கிறேனே எதற்காக நகைகளை கழற்ற வேண்டும்?

சர்வதேச விமானம்

சர்வதேச விமானம்

சர்வதேச விமானத்தில் பயணித்தால்தான் இவற்றை கழற்றி வைக்க வேண்டும். ஆங்காங்கே 5 சவரன், 10 சவரன் நகை போட்டாலும் பறித்துச் செல்கிறார்கள், என்னிடம் உள்ள நகையை திருடர்கள் யாரும் பறிக்கவில்லையா என கேட்கிறீர்கள். நான் நல்லவன் என்பதால் என்னை யாரும் தாக்கி நகையை பறித்து செல்ல முயற்சித்ததில்லை.

ரூ 1.25 கோடி

ரூ 1.25 கோடி

நான்என் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன். நான் போட்டிருக்கும் நகைகளை குத்துமதிப்பாக ரூ 1.25 கோடிக்கு மேல் போகும். என்னை அடித்து போட்டுவிட்டு நகைகளை எடுத்துச் செல்லலாம். ஆனால் யாரும் என்னிடம் வரவில்லை. வந்தால் எதற்கு வீண் வம்பு என நகைகளை கொடுத்துவிட்டு போய்விடுவேன்.

ரவுடினு சொல்லாதீங்கள்

ரவுடினு சொல்லாதீங்கள்

என்னை ஏன் பத்திரிகையாளர்கள் ரவுடி, தாதா என போடுகிறீர்கள். நான் இதுவரை யாரையாவது மிரட்டி பணம் பறித்தேனா, எந்த பொதுமக்களுக்காவது இடையூறாக இருந்திருக்கேனா, அப்பறம் என்னை ஏன் ரவுடி என்கிறீர்கள். என்னை ஏன் சித்ரவதைப்படுத்துறீங்க. என்னை ஜாலிமேன்னு போடுங்கள், ஏன் ஜோக்கர்னு கூட போடுங்க, நான் ஏத்துகிறேன், ஆனால் ரவுடினு மட்டும் போடாதீங்கள்.

இந்தியா முழுவதும்

இந்தியா முழுவதும்

நான் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறேன். நிறைய ஊர்களில் இந்த நகைகளுடன்தான் சென்று வருகிறேன். மதுரை அமைதியான பூமி, மதுரைக்காரர்கள் என்றாலே ரவுடிகள் என்பதை போல் சினிமாவில் காட்டுகிறார்கள். ஆனால் மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள், மதுரை என்றால் மீனாட்சி அம்மன்தான். மீனாட்சி மண்ணில் யாரும் எதையும் செய்ய முடியாது.

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை

நான் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் எப்படி இருக்கேன் பாருங்கள், இப்படி ஒரு நிலையில் அரசியலுக்கு வந்தால் அரசியல்வாதிகளுக்கு கெட்ட பெயராகிவிடும், சங்கடமாகிவிடும். நான் காலையில் வாக்கிங் செய்வேன், உடற்பயிற்சி செய்வேன், நல்லா சாப்பிடுவேன், பப்புக்கு போவேன். இதுதான் என்னுடைய ரொட்டீன் வொர்க்.

காயத்ரி ரகுராம் பாவம்

காயத்ரி ரகுராம் பாவம்

என்னுடன் நடிகர்கள் போட்டோ எடுத்தால் அது தவறா ஒரு முறை காயத்ரி ரகுராம், மாஸ்டர் கணேஷ் உள்ளிட்ட 5 அல்லது 6 பேர் மதுரையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட வந்தனர். நான் வித்தியாசமாக இருக்கிறேன் என்பதால் என்னுடன் காயத்ரி ரகுராம் போட்டோ எடுத்துக் கொண்டார். உடனே அந்த போட்டோவை திருச்சி சூர்யா தனது பதிவில் போட்டிருந்தார்.

 திருச்சி சூர்யாவுக்கு போன் போட்டேன்

திருச்சி சூர்யாவுக்கு போன் போட்டேன்

உடனே திருச்சி சூர்யாவுக்கு நான் போன் போட்டு என்னப்பா இப்படிலாம் போடலாமா, அவங்க யாருன்னே தெரியாது, ஓட்டலுக்கு சாப்பிட வந்த போது நான் வித்தியாசமாக இருப்பதால் என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இது ஒரு குற்றமா, இப்படியெல்லாம் போடலாமா என கேட்டேன். உடனே அவரும் அண்ணே சாரிண்ணே. எனக்கு அரசியல்வாதிகளுக்கும் மிகவும் தூரம்.

எனக்கும் அரசியல்வாதிக்கும் ரொம்ப தூரம்

எனக்கும் அரசியல்வாதிக்கும் ரொம்ப தூரம்

அமைச்சர் மூர்த்தி அண்ணனை எனக்கு நல்லா தெரியும். ஆனால் அவரிடம் நான் ஒரு உதவி கூட கேட்டதில்லை. உதவி கேட்க வேண்டிய நிலையில் நான் இல்லை. காயத்ரி ரகுராமை யாரென்றே தெரியாது, அவரை ஒரே நாள்தான் வாழ்க்கையில் பார்த்துள்ளேன் என வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார். பெரிய பிரேஸ்லெட் 10 விரல்களிலும் மோதிரம், பாம்பு போல் செயின், உள்ளிட்ட நகைகளை அணிந்துள்ள வரிச்சியூர் செல்வம் கொரோனா காலகட்டத்தில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்ட போது 10 பவுனில் தங்க முகக் கவசம் அணிந்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+