தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளரானார் நடிகர் விஜய் வசந்த்.. 32 துணை தலைவர்களை நியமித்து காங். அதிரடி!
தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆனார் விஜய் வசந்த்
சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரானார் விஜய் வசந்த்..!
Recommended Video

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.. அதனால், அங்கு வரும் பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையமும் அறிவித்தது.

இதையொட்டி, அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சீட் பெறக் கடும் போட்டி கடுமையான நிலவியது.. அந்த வகையில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தன் தந்தையின் பாணியில் அரசியல் பயணங்களை முன்னெடுத்து வருவதால், அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
"அவர் இருந்த இடத்திற்கு நீங்கள் வரணும்" என்று அவரது அபிமானிகளும் அரசியலுக்கு இழுத்து வந்தனர்.. ஆனால், இதற்கு விஜய் வசந்த் எந்தவித பதிலையும் சொல்லாமல் இருந்தார்.. கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதன் படிதான் செயல்படுவோம்.. தேர்தலில் நிற்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இவர் இப்படி சொன்னாலும், ரூபி மனோகரன் அல்லது விஜய் வசந்த் இருவரில் ஒருவருக்குதான் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கும் என்று தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில்தான், விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்..
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள தமிழக காங்கிரஸ் கட்சிக்கு துணை தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்... அந்த வகையில்தான், விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மூத்த தலைவர் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரின் மகன்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக ரூபி மனோகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்களாக கோபண்ணா உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்கபாலு மகன் கார்த்தி, திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்காக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் வாக்குறுதி தயாரிக்கும் குழு தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸின் ஒருங்கிணைப்புக் குழுவில் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.எஸ் . அழகிரி உள்ளிட்டோர் உள்ளனர். ராமசாமி, சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர் ,செல்லகுமார், மாணிக்கம் தாகூர் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பெரும்பாலும் வாரிசுகளே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.. என்றாலும், அதலபாதாளத்தில் தமிழக காங்கிரஸ் தொங்கி உள்ள நிலையில், ஏகப்பட்ட உட்பூசல்கள் நிலவி வரும் நிலையில், விஜய் வசந்த் தன் பொறுப்பை சிறப்பாக செயல்படுத்துவாரா? அப்பாவின் பெயரை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications