10.5% உள் ஒதுக்கீடு, தேர்தல் தோல்வியை திசை திருப்ப அன்புமணி செயல்படுகிறார்: விசிக விமர்சனம்
விசிக புகார்
வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியை மறைப்பதற்காக அன்புமணி சாதி மோதலை தூண்டிவிடும் செயலை செய்து வருகிறார், 'ருத்ர தாண்டவம்' படத்தில் வன்னியர்களை இழிவாக காட்சிப்படுத்தியதை தடுக்காமல் ஜெய்பீம் படத்தை எதிர்ப்பது கண்டிக்கத்தக்க செயல் என விசிக செய்தித்தொடர்பாளர் விக்கிரமன் விமர்சித்துள்ளார்.

ஜெய்பீம் பட சர்ச்சை
தமிழகத்தில் ஜெய்பீம் படத்தைக் காரணம் காட்டி ஜாதிமோதலை அன்புமணி ராமதாஸ் தூண்ட முயல்வதால் அவர்மீதும், சூர்யாவை கொல்வோம், தியேட்டரை கொளுத்துவோம் என சொல்லும் மறைந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ், சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் விசிக சார்பில் அதன் இணைச் செயலாளர் விக்ரமன் இன்று புகார் அளித்தார்.
பாமக எதிர்ப்பு வழக்கு
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் சிறப்பான படம் என்று பலராலும் வரவேற்கப்பட்டாலும், அவர் வன்னியர்களுக்கு எதிராக சித்தரித்துள்ளார் என பாமகவினர் கொந்தளித்தனர். அவர்கள் கூறிய காட்சிகளை நீக்கிய பின்னரும் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் பிரிந்து பல்வேறு கருத்துகளை வைக்கின்றனர்.
அன்புமணி மீது விசிக டிஜிபியிடம் புகார்
விசிக சார்பில் சூர்யாவுக்கு ஆதரவு கருத்து தெரிவித்து வரும் நிலையில் இன்று டிஜிபியிடம் அன்புமணி மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டது. அவரது புகாரில் இருபிரிவினருக்கிடையே கலவரம் மூட்டும் செயலை அன்புமணி ராமதாஸ் செய்கிறார். என்று தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். அவர் அளித்த புகார் வருமாறு:
விசிக புகாரில் கூறியுள்ளது என்ன?
"கடந்த நவம்பர் 2 அன்று சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்து சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் பிரைம் என ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜெய் பீம் படம் வன்னியர் சமுதாயத்தை வன்முறையாளர்களாக காட்சி கொடுத்ததாக கூறி கடந்த 10 ஆம் தேதி அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு 9 வினாக்களுடன் கடிதம் எழுதி இருந்தார். கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

வன்முறையைத்தூண்டும் அன்புமணி
"படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை அளிக்கும் ரசிகர்கள் தான் பெரியவர்கள் இந்த படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தை காட்டினால் அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தை காட்ட கூடும். இவை எதுவுமே தேவையில்லை" இதன் மூலம் அன்புமணி ராமதாஸ் தன் கட்சித் தொண்டர்களை சூர்யாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டி விட்டுள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம்
மேலும் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை குலைப்பதாகும். இது இந்திய தண்டனைச் சட்டம் 153 (a) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றமாகும் என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன். அன்புமணியின் அறிக்கையை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி அன்று வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி ஜெ குரு அவர்களின் மருமகன் மனோஜ் என்பவர் நடிகர் சூர்யாவின் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை கொளுத்துவோம் நடிகர் சூர்யா இனி உயிரோடு நடமாட முடியாது என பகிரங்கமாக கலாட்டா உள்ளிட்ட சில யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்துள்ளார்.
உதைத்தால் ஒரு லட்சம் நடவடிக்கை வேண்டும்
மேலும் கடந்த 14 ஆம் தேதி அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி என்பவர் நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் தருவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது பிரபல நாளிதழில் வெளியாகி உள்ளது. எனவே அன்புமணி ராமதாஸ், மனோஜ் மற்றும் சித்தமல்லி பழனிச்சாமி ஆகியோர் மீது தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்".
ருத்ரதாண்டவம் படம் வன்னியர்களை இழிவுப்படுத்தியபோது அன்புமணி எங்கே
இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் புகாரில் தெரிவித்துள்ளார். புகார் அளித்தப்பின் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமன் "வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியை மறைப்பதற்காக அன்புமணி சாதி மோதலை தூண்டிவிடும் செயலை செய்து வருகிறார், 'ருத்ர தாண்டவம்' படத்தில் வன்னியர்களை இழிவாக காட்சிப்படுத்தியதை தடுக்காமல் ஜெய்பீம் படத்தை எதிர்ப்பது கண்டிக்கத்தக்க செயல்" எனத் தெரிவித்தார்.
-
திருமாவுக்கு பதில் மாஜி காங். தலைவரின் மகன் போட்டி.. காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் ஜோதிமணி யார்? -
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
திருமாவளவனிடம் போனில் பேசிய ஸ்டாலின்.. காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் மாற்றத்துக்குப் பின்னணி என்ன? -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
விசிக திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
விசிக வேட்பாளர்களுக்கு 3 தொகுதிகளில் வாக்களிக்க வேண்டாம்.. திருமாவளவனே சொன்ன வார்த்தை.. பின்னணி -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications