பிரதமர் வேட்பாளர் யார்? “செப். 9க்கு பிறகு பேசலாம்” - திருமாவளவன் கொடுத்த ரிப்ளை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "யார் பிரதமர் வேட்பாளர்?" என்ற கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் இன்று பதில் அளித்துள்ளார். தவெக தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தவெக - காங்கிரஸ் கூட்டணி நிலவரம், 2029ல் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி மற்றும் விஜய்யின் பிரதமர் கனவு குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.

Thirumavalavan Vijay tvk

தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள கட்சிகள் மற்றும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள், மதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சி அதனைத் தொடர்ந்து சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் வந்தனர்.

விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து, செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன் பின்னர் செய்தியாளர்ளைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், "தவெக அரசு அமைய ஆதரவு தந்த கட்சிகளின் கூட்டம் ஏற்கெனவே ஒருமுறை நடந்தது. வருகிற 9 ஆம் தேதி இரண்டாவது கூட்டம் முதல்வர் விஜய்யின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும்.

கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்தக் கூட்டத்தில் விசிக பங்கேற்கும். தவெக தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்." என்றார்.

பிரதமர் வேட்பாளர் விவகாரம் பேசுபொருளாகி வருவது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்பது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதுபற்றி செப்டம்பர் 9 ஆம் தேதிக்குப் பிறகு பேசலாம்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+