பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்று பேசினேனா? பொய்யை பரப்பும் வக்கிர கும்பல்: திருமாவளவன் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனுதர்மத்தை தாம் விமர்சித்துப் பேசியதை திரித்து, பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என தாம் பேசியதாக பொய்யாக வக்கிர கும்பல் வதந்தி பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனுதர்மமானது இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்றே குறிப்பிட்டிருக்கிறது என்பதுதான் பெரியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியது. இந்த நிலையில் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் எனும் சனாதன நூலை எரிக்கும் போராட்டம் நாளை நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்திருந்தார்.

திருமாவை கைது செய்ய கோரிக்கை

இதற்கு பதிலாக பெரியார் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை பதிவிட்டு, பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசிவிட்டார். ஆகையால் அவரை கைது செய்ய வேண்டும் என்கின்றனர் பாஜகவினர். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில் திமுகவை கோர்த்துவிட்டு பதிவு செய்திருக்கிறார்.

திமுகவின் பதில் என்ன?

அவர் தமது பதிவில், தி மு க வில் 90% ஹிந்துக்கள் உள்ளார்கள் என்ற @mkstalin அவர்களே,ஹிந்து பெண்கள் குறித்து @thirumaofficialன் தவறான, கொச்சையான, அவதூறு கருத்துக்களை தி மு க ஏற்றுக்கொள்கிறதா? இல்லையெனில், மத மோதல்களை தூண்டும் @thirumaofficial கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பீர்களா? என கேட்டிருக்கிறார்.

திருமாவளவனின் விளக்கம்

இது தொடர்பாக திருமாவளவன் அளித்துள்ள விளக்கம்: பெண்கள் காலம்காலமாக வன்கொடுமைக்கு ஆளாகிவருகின்றனர். இதற்கு காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படுகிற மனுதர்மம் எனும் கருத்தியல்தான் காரணம் என்பதை நமது முன்னோர்கள் பலரும் கண்டறிந்து வெளிப்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக அம்பேத்கர், பெண்களை இழிவு செய்யும் மனுதர்மத்தை கொளுத்துவோம் என்றார். தந்தை பெரியாரும் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை எரிப்போம் என்றார்.

இணைய கருத்தரங்கில் பேசியது

இணைய கருத்தரங்கில் பேசியது

இந்த அடிப்படையில்தான் 1 மாதத்துக்கு முன்னர் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் மனுதர்மம் என்பது பெண்களை கொச்சைப்படுத்துகிறது என குறிப்பிட்டேன். ஆனால் அரசியல் ஆதாயம் கருதுகிற ஜாதிவெறி பிடித்த கூட்டம், மதவெறி பிடித்த கூட்டம் திட்டமிட்டு எனக்கு எதிரான பொய் பரப்புரையை மேற்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிராக நான் பேசியதைப் போன்று தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதுமுற்றிலும் பொய். பெண்களுக்காக நாங்கள் வாதாடுகிறோம். பெண்கள் மீட்சி பெற குரல் கொடுக்கிறோம்.

கூட்டணியில் சலசலப்புக்கு முயற்சி

கூட்டணியில் சலசலப்புக்கு முயற்சி

இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆணாதிக்க வெறிபிடித்த கூட்டம் அவதூறுகளை பரப்பி வருகிறது. திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தகைய துருப்புச் சீட்டுகளை கையில் எடுக்கின்றனர். இதற்கு ஒருபோதும் நாம் அஞ்ச தேவை இல்லை. இதற்கு எதிராக மக்களை நாம் அணிதிரட்டுவோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+