கருணாநிதி பிறந்தநாளை இந்த நாளாக அறிவிங்க.. அதான் சரி! மேடையிலேயே ஸ்டாலினுக்கு திருமா வைத்த கோரிக்கை!
சென்னை : கருணாநிதியின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் என்று அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட தமிழ்நாடு அரசு தரப்பிலும், திமுக கட்சி சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜூன் 3ஆம் தேதி அன்று மாலை 6 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னையில் நடக்க இருந்தது. ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புளியந்தோப்பு பகுதியில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினர். அந்தவகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.
திருமாவளவன் பேசுகையில், "கருணாநிதி நூற்றாண்டு தொடக்கவிழா வரலாற்று சிறப்பு வாய்ந்த எழுச்சி மிகு விழாவாக நடந்து வருகிறது.கலைஞர் என்றால் பேரறிஞர் அண்ணா என்று எண்ண வைக்கும், பேரறிஞர் அண்ணா என்றால் தந்தை பெரியாரை எண்ணவைக்கும். பெரியாரை செழுமைப்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா, பெரியாரை வலிமைப்படுத்தியவர் கலைஞர்.
1976 முதல் 1989 வரையில் 13 ஆண்டுகாலம் கருணாநிதி சந்தித்த நெருக்கடிகள், இடர்கள், இன்னல்கள், அவமானங்கள், அவதூறுகளை தாங்கிக்கொண்டு ஒரு கட்சியை கட்டிக் காப்பாற்றியதன் விளைவாகத்தான் ஸ்டாலின் முதலமைச்சராக அமர முடிகிறது.
மாநில அரசுகள் இப்போதுதான் குமுறத் தொடங்கி உள்ளன. மத்தியில் அதிகாரத்தை குவிக்கத் தொடங்கி உள்ளனர். ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே ஆட்சி என்கிறார்கள். எங்கே போய் இது முடியப்போகிறது? இந்த இடத்தில் எல்லா மாநிலங்களிலும் ஒரு தலைவரை நினைவு கூர்கிறார்கள் என்றால் அது கருணாநிதி அவர்களைத்தான்.
சுயாட்சி என்பது ஒவ்வொரு மாநில அரசுக்கும் தேவை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இறையாண்மை இருக்கிறது என்பதை இந்தியாவிற்கே எடுத்துரைத்தவர் கருணாநிதி. சில ஆண்டுகளுக்கு முன்னால் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழி நாள் என்று கொண்டாடப்படும் என அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அது ஒரு மாநிலத்தோடு, ஒரு மொழியோடு முடிந்துவிடும்.
கருணாநிதி அகில இந்திய பார்வை கொண்டவர். அரசமைப்புச் சட்டத்தின்படி இங்கே கூட்டரசு அமையவேண்டும், வெறும் ஒன்றிய அரசு அல்ல, கூட்டரசு அமைய வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தவர் கலைஞர் கருணாநிதி. எனவே, கருணாநிதியின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் என்று அறிவிக்க வேண்டும்.
கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி, உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கத்தை கட்டுவதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். அதனைப் பாராட்டுகிறேன். ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தின் காரணமாக, கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளையே ரத்து செய்தார். அந்தப் பண்பு கருணாநிதியின் பண்பு. அப்படியே ஸ்டாலினிடம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
மக்களின் மீதுள்ள கருணை, மக்களின் மீதுள்ள நேசத்தால், தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அந்த நாளை துக்க நாளாக அறிவித்ததோடு, உடனே 2 அமைச்சர்களை ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தார்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை கூட்டப்போகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் அது அமையுமானால் இந்தி பேசும் 6 மாநிலங்களில் இருந்து மட்டுமே பெரும்பான்மை உறுப்பினர்கள் வெற்றி பெற்று அவர்களின் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றிக் கொள்வார்கள். அது இந்துராஷ்டிரா கூட அல்ல அது பிராமண ராஷ்டிரா.
சனாதன சக்திகளை ஆட்சி அதிகாரபீடத்தில் அப்புறப்படுத்தும் ஆற்றல் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உள்ளது. உங்களை போல் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி அமைக்க ஒவ்வொரு கட்சிகளும் முன்வர வேண்டும். காங்கிரஸும் ஒத்துழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications