தவெக கூட்டணியில் விசிக தூண் மாதிரி.. வன்னி அரசு பேச்சுக்கு நடுவே ராஜ்மோகன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதசார்பற்ற சமூக நீதி கூட்டணி பலமாக உள்ளது என்றும், தவெக கூட்டணியில் விசிக தூண் போன்று உள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். மேலும் திருமாவளவன் எங்கள் அண்ணன் போன்றவர் என குறிப்பிட்ட ராஜ்மோகன், அமைச்சர் வன்னி அரசு பேச்சு தொடர்பாக விளக்கம் அளித்து பேசினார்.

கடந்த சில நாட்களாகவே தவெக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. குறிப்பாக சவுமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனவும் பேசப்பட்டது. இதனால் தான் நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் பாமக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

VCK stands like a pillar in the TVK alliance Minister Rajmohan

இது தொடர்பாக விசிக தலைவர்களிடம் கேட்டபோது, பாமக தவெக கூட்டணியில் இணைந்தால் விசிக வெளியேறிவிடும் என உறுதிபட கூறிவந்தனர். இந்த நிலையில் இடைத்தேர்தலில் இரு தொகுதியிலும் தவெக வெற்றி பெற்ற நிலையில் பாமக துணை முதல்வர் பதவி கேட்டதாகவும் தகவல் வெளியானது. அன்புமணி ராமதாசுக்கு முதல்வர் விஜய் போன் பேசி பிறந்தநாள் வாழ்த்து கூறியதையும் இதோடு இணைத்து வைத்து பேசப்பட்டது.

இந்நிலையில் தவெக கூட்டணியில் பாமக இணைந்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவோம் என்றும் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என அமைச்சர் வன்னி அரசு பேசியிருந்தார். வன்னி அரசு பேசியது குறித்து அமைச்சர் ராஜ்மோகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராஜ்மோகன் கூறியதாவது:-

"மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் விசிக ஒரு தூணாக உள்ளது. எங்க கூட்டணி பலமாக உள்ளது. எங்க கூட்டணியில் எந்த ஒரு சஞ்சலமும், கருத்து வேறுபாடும் இல்லை. நிறைய பேர் அப்படி சொல்லலாம். ஆனால் உண்மைத்தன்மை அப்படி இல்லை. அந்த கூட்டணி மற்றும் இல்லை. அதை தாண்டி அவர் எங்கள் அண்ணன். தொல் திருமா என்பவர் எங்க தாய் சிறுத்தை. திருமா அண்ணனும் எங்க அண்ணனும் சேர்ந்து இருப்பது ஒரு கொள்கை கூட்டணி. கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+