"திராவிடன்" என்று சொன்ன ஆளுநர்..ஆர்.எஸ்.எஸ்.ரவி என்று கொந்தளிக்கும் திருமாவளவன்
ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆர்.எஸ்.எஸ்.ரவி என்று விமர்சித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
சென்னை: ஆர். எஸ்.எஸ் அமைப்பின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள் என்று சொன்ன தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
வேலூர் சிப்பாய் எழுச்சி தினத்தில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ''சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் சிப்பாய் புரட்சியில் பங்கேற்றார்கள். நேதாஜி ஐ. என். ஏ படைக்கு சிப்பாய்கள் வேண்டும் என்று சொன்னபோது முதலில் ஆதரவு கொடுத்தவர்கள் வேலூர் வீரர்கள் தான்'' என்றார்.
தொடர்ந்து அது குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ''மதம், பொருளாதாரம், இடத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டார்கள். ஆங்கிலேயர் நம்மை ஆள்வதற்கு முன்னர் பல மன்னர்கள் நம்மை ஆண்டார்கள் .

ஒரே குடும்பம்
அப்பொழுது மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் சென்று வந்தார்கள் . வட இந்தியாவில் இருந்து மட்டும் மக்கள் இங்கு வரவில்லை . இங்கே இருந்தும் அறிவை வளர்க்க காசி போன்ற இடங்களுக்கு சென்று இருக்கிறார்கள். அப்போது நாம் அனைவரும் ஒரே குடும்பமாக தான் இருந்தோம் என்றார்.

பிரித்தாளும் சூழ்ச்சி
அவர் மேலும், ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே நாம் கல்வியில் சிறந்து விளங்கி இருக்கிறோம். ஆங்கிலேயர்கள் தான் நம்மிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். வரலாற்றை இன்னும் உற்று நோக்கி பார்த்தால் தெரியும்.

திராவிடர்கள்
விந்திய மலையை அடிப்படையாக வைத்து தான் நார்த்தில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும், தென்பக்கம் இருப்பவர்களை திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் தான் 'திராவிடன்' என்ற வார்த்தையில் முதன் முதலில் குறிப்பிட்டார்கள்'' என்று சொன்னார்.

சர்ச்சையை கிளப்பிய கருத்து
திராவிடன் என்கிற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டது ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

திமுகவின் டி.ஆர்.பாலு
தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும் ரவியை போல் சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என திமுகவின் டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார். கவர்னர், கவர்னர் ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம் கூட பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டவை தான் என்பதையும் நினைவூட்டுவதோடு, தமிழக ஆளுநர் தன் பதவியேற்பின்போது, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் டி.ஆர். பாலு.

திருமாவளவன்
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ''திராவிடன் என்பது நிலம்வழி சார்ந்தது என்றால், ஆரியன் என்பதுவும் நிலவியல் சார்ந்த இனப்பிரிவு தானா? மரபினம் இல்லையா? ஆரியரான ஹிட்லரும் அதேபோல நிலம் சார்ந்த அடையாளத்தைக் கொண்டவர்தானா? ஆர். எஸ்.எஸ் அமைப்பின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications