பெண் தலைவரை இப்படியா பேசுவது? மன்னிப்பு கேளுங்க.. ரூ 2 கோடி கேட்டு சீமானுக்கு வீரலட்சுமி நோட்டீஸ்
சென்னை: நான் தமிழர் இல்லை என என் மீது அவதூறு பரப்பியதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ 2 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என சீமானுக்கு தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவி வீரலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அவர் புகார் கூறிய நிலையில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை தலைவி வீரலட்சுமி செயல்பட்டார். இந்த நிலையில் சீமானை வீரலட்சுமி பொதுவெளியில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதையடுத்து வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் சேர்ந்து கூட சமூகவலைதளங்களில் சீமானை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் வீரலட்சுமி, விஜயலட்சுமிக்கு இடையே கூட சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் நடிகை விஜயலட்சுமி தனது புகாரை கடந்த 16ஆம் தேதி இரவோடு இரவாக வாபஸ் வாங்கிக் கொண்டு பெங்களூர் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சீமானும் விஜயலட்சுமியும் சமாதானம் ஆனால் மகிழ்ச்சிதான் என்றும் அவர்கள் சமாதானம் ஆனதற்கு கோயிலுக்கு சென்று 1000 பேருக்கு அன்னதானம் செய்கிறேன் என்றும் வீரலட்சுமி தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் காலில் சீமான் விழுந்து சமரசம் செய்து கொண்டதாகவும் தன்னிடம் உள்ள படையை திரட்டிவந்தால் நாம் தமிழர் கட்சியால் வடதமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்றும் சீமானுக்கு சவால் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து வீரலட்சுமி மீது சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்பும் வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர போவதாக சீமான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் தன் மீது அவதூறு பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால் ரூ 2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என வீரலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications