கேரட் அல்வா, பூரி, ஐஸ்க்ரீம்.. தடபுடலாக தயாராகும் கமகம சைவ விருந்து.. தவெக விழாவின் உணவுப்பட்டியல்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக தடபுடலாக விருந்து உருவாகி வருகிறது. அதன்படி மொத்தமாக 21 வகையான உணவுகள் விருந்தில் இடம்பெற்றிருக்கிறது. சைவ உணவுகள் மட்டுமே தயாராகி வரும் நிலையில், கேரட் அல்வா முதல் வெண்ணிலா ஐஸ்க்ரீம் வரையிலான உணவுப்பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தவெகவின் முதல் மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில், தற்போது மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ரெசார்டில் தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா தொடங்கவுள்ளது. இந்த விழாவில் சுமார் 2500 நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அதேபோல் இந்த விழாவில் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளுக்கு பாஸ் வழங்கப்பட்டு, அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஃபோர் பாய்ண்ட்ஸ் ரெசார்டில் உள்ள கான்ஃபெரன்ஸ் ஹாலில் சுமார் 2,500 பேர் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டம் முடிவடைந்த பின் அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெசார்டில் ஒரு நபருக்கு சாப்பாடு மட்டும் ரூ.2,300 என்றும், ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.2,800 வரை கட்டணம் வரும் என்று அந்த ரெசார்ட் நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
தவெக சார்பாக மொத்தமாக 3 ஆயிரம் பேருக்கு சாப்பாடு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிக்கின்றனர். இந்த நிலையில் தவெக விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு சைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தவெக நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருப்பதால், அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படக் கூடாது என்பதால் சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
மொத்தமாக 21 வகையான சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு தடபுடலாக விருந்து தயாராகி இருக்கிறது. அதன்படி உணவுப் பட்டியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதில், கேரட் அல்வா, மசால் வடை, காலி ஃபிளவர் 65, பூரி, உருளைக் கிழங்கு பட்டாணி குருமா, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சோறு, கதம்ப சாம்பார் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
அதேபோல் போல் அப்பளம், பூசணிக் காய், செள செள, காரட், பீன்ஸ் கூட்டு, பீன்ஸ் பருப்பு, ரசம், மோர், சால்ட், வாழைப்பழம், வெண்ணிலா ஐஸ்க்ரீம், மோர், ஊறுகாய், வாட்டர் பாட்டில், அடை பிரதமன் ஆகியவையும் உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனை தவெக நிர்வாகிகள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications