ஆர்டிஓக்கள் கையில் இன்றே போன புதிய ஆப்.. தமிழ்நாட்டில் வரும் திங்கள் முதல் புதிய நடைமுறை
சென்னை: தமிழ்நாட்டில் புதிய செயலியை பயன்படுத்தாத வாகன புகை பரிசோதனை மையங்களுக்கு 'சீல்' வைக்கப்படும் என போக்குவரத்துத்துறை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மோட்டார் வாகன சட்டப்படி அனைத்து வாகனங்களுக்கும் மாசுக் கட்டுப்பாடு சான்று (பியுசி) பெற்றிருப்பது கட்டாயம். அதனை 6 மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக வாகனம் வைத்திருப்போர் புதுப்பிக்க வேண்டும். இந்தச் சான்று இல்லாமல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) ஓட்டுநர் உரிமம், வாகனத் தகுதிச் சான்று வழங்கப்படாது. வாகனக் காப்பீட்டைப் புதுப்பிக்கும்போதும் புகை பரிசோதனைச் சான்று அவசியம் ஆகும்.

இவ்வாறு சான்று அளிப்பதற்கென போக்குவரத்துத் துறையால் அங்கீகரிக்கபட்ட வாகனப் புகை பரிசோதனை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுகின்றன. இவர்களுக்கு என்று தனியாக 'பி.யு.சி.சி.2.0' என்ற ஆப் இருக்கிறது. இந்த புதிய ஆப் நடைமுறை வரும் திங்கள் முதல் (மே 6 முதல்) நடைமுறைக்கு வருகிறது. இந்த ஆப் காரணமாக இனி முறைகேடு குற்றச்சாட்டுகள் வராது என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "வாகனப் புகை பரிசோதனை மையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களை புகுத்தவும் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது 'பி.யு.சி.சி.2.0' என்ற புதிய செயலி (ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் இந்த புதிய நடைமுறை வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த புதிய செயலி குறித்த செயல்முறை விளக்கத்தை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் இன்று (வெள்ளிக்கிழமை) அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வழங்குவார்கள்.
இதனைத்தொடர்ந்து செயலியை 6-ந் தேதி முதல் அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி அதன் மூலம் மட்டுமே வாகனப் புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்ய தவறும் வாகனப் புகைப் பரிசோதனை மையங்களுக்கு 'சீல்' வைக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே மோட்டார் வாகனச் சட்டம் 190[2] பிரிவின்படி, புகை பரிசோதனை சான்று இல்லாமல் வரும் வாகனங்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையிலிருந்து தொடர்ந்து புகை பரிசோதனை சான்று இல்லாமல் வந்தால், ஒவ்வொரு முறைக்கும் ரூ. 2,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications