Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதையில் வாகனம் ஓட்டிவிட்டு ஃபைன் கட்டலையா..வாகனங்கள் கோர்ட் மூலம் பறிமுதல்..காவல்துறை எச்சரிக்கை

போதையில் வாகனம் ஓட்டிவிட்டு ஃபைன் கட்டாமல் சென்றால் வாகனங்கள் கோர்ட் மூலம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், ரூ.10,000 அபராத தொகை கட்ட வேண்டும் என்ற விதி தற்போது கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டிலேயே அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடும் உள்ளது. விபத்துக்களுக்கு பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறல்களே காரணமாக உள்ளது.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வது.. குடிபோதையில் வாகனங்களை இயக்குவது..சிக்னல் ஜம்பிங் செய்வது என வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களை தினசரி சாலையில் காண முடிகிறது.

போக்குவரத்து விதிமீறல்

போக்குவரத்து விதிமீறல்

அதுவும் தலைநகர் சென்னையில் வாகன ஓட்டிகள் பலரும் விதிமீறல்களில் ஈடுபடுவதை காண முடியும். போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி விபத்தில்லா நகரமாக சென்னையை மாற்றவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் விதிகளை மீறி வாகனம் ஓட்டி வருபவர்களிடம் அபராதம் தொகை விதிக்கின்றனர்.

பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதம்

பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதம்

புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன விதிகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராத தொகையால் தற்போது வாகன ஓட்டிகள் பலரும் ஹெல்மெட் அணிந்து செல்வது அதிகரித்துள்ளது.

அபராதம் கட்டாமல் கிடப்பில் போடுவதாக

அபராதம் கட்டாமல் கிடப்பில் போடுவதாக

இருந்தாலும் போக்குவரத்து விதி மீறல்கள் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்போது வாகன ஓட்டிகளிடம் இருந்து பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாகவும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், இ செல்லானும் கொடுக்கப்படுகிறது. ஆனால் பல வாகன ஓட்டிகளும் இ செல்லானை வாங்கி விட்டு அபராதம் கட்டாமல் கிடப்பில் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போதையில் வாகனம் ஓட்டினால்..

போதையில் வாகனம் ஓட்டினால்..

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:-சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து காவலர்கள் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் மூலம் பறிமுதல் செய்யப்படும்

நீதிமன்றங்கள் மூலம் பறிமுதல் செய்யப்படும்

மேலும், போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10,000 அபராத தொகை கட்ட வேண்டும் என்ற விதி தற்போது கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+