"திருமாவளவன் பாஜகவை ஆதரிப்பார்.. விசிகவுக்கு திமுகவில் மரியாதையே இல்லை".. போட்டு தாக்கிய இப்ராஹிம்
திருமாவளவனை மீண்டும் சீண்டி உள்ளார் வேலூர் இப்ராஹிம்
சென்னை: திருமாவளவன் கட்சிக்கு திமுகவில் சுத்தமா மரியாதை இல்லை. பாஜகவில் பட்டியலினத்தவர் மாநில தலைவர், மத்திய அமைச்சராகவும் ஆகிறார்... இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பாஜகவை ஆதரிப்பார்' என்று பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சிஏஏ சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சொல்லி வந்த நிலையில், அந்த சட்டத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று சொல்லி தமிழகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பியர் இப்ராஹிம்..
இப்ராஹிம் சிறந்த பேச்சாளர்... சமீபகாலமாக நடந்து வரும் தேர்தல்களின்போது, பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர்.. அதனாலேயே பாஜக இவரை கைவிடவில்லை.. கொஞ்ச காலத்திலேயே, பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலர் பதவியில் இப்ராஹிமை அமர்த்தி அழகு பார்த்தது.

பேட்டி
எனினும் விசிகவுடன் கருத்தியல் ரீதியாக தொடர்ந்து மோதி வருபவர் இப்ராஹிம்.. வேல்யாத்திரை விவகாரத்தின்போதே இப்ராஹிம் ஒருமுறை செய்தியாளர்களிடம் பேசும்போது, "வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி கொண்டிருக்கிறார் திருமாவளவன்..

இந்துக்கள்
கடந்த காலங்களில் இந்துமத வழிபாட்டுத் தலத்தில் இருக்கக்கூடிய சிலைகளை பற்றிப் பேசும்போது ஆபாசமாக இருக்கிறது, அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று பல்வேறு வகையில் இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி வந்தவர், இப்போது தேர்தல் நெருங்கும் காலமென்பதால் சிதம்பரம் கோவிலில் போய் பொட்டு வைத்துக்கொண்டு அந்த நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

பிரச்சாரம்
தமிழக முஸ்லிம்கள் இவர் பின்னால் செல்வது என்பது ஆபத்தானது.. இஸ்லாமிய மக்கள் நிச்சயமாக புரிந்துகொள்வார்கள்.. திருமாவளவன் என்ற தீய சக்தியை வரக்கூடிய தேர்தலில் தமிழகத்தில் தமிழக மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அடுத்த கட்ட பிரச்சாரமாக அமையும்" என்றார்.

விசிக
கோவிலில் போய் பொட்டு வைத்து கொண்டு நாடகம் அரங்கேற்றுபவர் என்று சொன்னதுமே விசிகவினர் கொந்தளித்துவிட்டனர்.. இப்படி கடந்த காலங்களில் இருந்து திருமாவை விமர்சித்து வரும் இப்ராஹிம், இப்போதும், அதேபோன்றே கருத்து கூறியுள்ளார்.. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சிறுபான்மை அணி நிர்வாகிகளை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற கூட்டம் நடத்தி வருகிறோம்.. கோவிலில் போய் பொட்டு வைத்து கொண்டு நாடகம் அரங்கேற்றுபவர் என்று சொன்னதுமே விசிகவினர் கொந்தளித்துவிட்டனர்.. இப்படி கடந்த காலங்களில் இருந்து திருமாவை விமர்சித்து வரும் இப்ராஹிம், இப்போதும், அதேபோன்றே கருத்து கூறியுள்ளார்.. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சிறுபான்மை அணி நிர்வாகிகளை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற கூட்டம் நடத்தி வருகிறோம்..

திருமாவளவன்
பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று திமுக - திருமாவளவன் உள்ளிட்டோர் தூண்டிவிட்டு, பகைமை பாராட்டும் சூழலை உருவாக்கியுள்ளனர். இதை உடைக்க, கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை சந்தித்து, பாஜக சாதனை குறித்து விளக்குவோம்... பாஜகவினர், இஸ்லாமியர் பகுதிகளில் ஓட்டு சேகரிக்க சென்றால், திமுக ஆட்சியும், போலீசாரும் தடுக்கின்றனர்... திருமாவளவன் கட்சிக்கு திமுகவில் சுத்தமா மரியாதை இல்லை. பாஜகவில் பட்டியலினத்தவர் மாநில தலைவர், மத்திய அமைச்சராகவும் ஆகிறார்... இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பாஜகவை ஆதரிப்பார்' என்றார்.
-
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications