Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CWC பாத்தா குழந்தை பிறக்கும்! என்னங்க சொல்றீங்க?கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்! தெறிக்க விடும் மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பட் கூறிய நிலையில், அதனை பங்கமாய் கலாய்க்கும் நெட்டின்கள், டிசைன் டிசைனாய் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Recommended Video

    CWC பாருங்க குழந்தை பிறக்கும்! என்னங்க சொல்றீங்க? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ் #TV

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். மற்ற ரியாலிட்டி ஷோக்களை விட இந்த ஷோவில் நகைச்சுவையை சற்று தூக்கலாகவே இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

    சமையல் மட்டுமல்லாது கலகலப்பான நடுவர்கள், காமெடி செய்யும் கோமாளிகள், நடிகர், நடிகைகள், கெஸ்ட் ரோல் என நாளுக்கு நாள் வித்தியாசமான சிந்தனையோடு நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    குக் வித் கோமாளி நிகழ்ச்சி

    குக் வித் கோமாளி நிகழ்ச்சி

    கோமாளிகள் மற்றும் குக்குகள் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு நடுவே நடுவர்களாக இருக்கும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று செஃப்களும் பல நேரங்களில் நிரூபித்து வருகின்றனர். கோமாளிகளுக்குள் நடக்கும் சுவாரசியங்கள் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமான புகழ், பாலா, அஸ்வின், சிவாங்கி என தற்போது சினிமாவிலும், ஹீரோ, காமெடியன் என கலக்கி வருகின்றனர்.

    காமெடி நிகழ்ச்சி

    காமெடி நிகழ்ச்சி

    அந்த அளவுக்கு பிரபலமாக சென்று கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. வார வாரம் இந்த நிகழ்ச்சியை காமெடிக்காகவே பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த பல மாதங்களாக சிலாகித்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் கடந்த சில நாட்களாக கலாய்த்து காய வைத்து தொங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த 'கிரிங்' காமெடிதான் காரணம்.

    நடுவர் வெங்கடேஷ் பட்

    நடுவர் வெங்கடேஷ் பட்

    தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி 3 வது சீசனில் ரோஷினி, அம்மு அபிராமி, ஸ்ருதிகா, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், வித்யுலேகா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ள நிலையில், நிகழ்ச்சி குறித்து பேசிய பிரபல செஃபும் , குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவருமான வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.

    குழந்தை பிறக்குமா?

    குழந்தை பிறக்குமா?

    மேலும் அதோடு இந்த பெண்ணுக்கு அட்வைஸ் கொடுத்த பெண் தனக்கும் குழந்தை இல்லாமல் இருந்ததாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து மனஅழுத்தம் குறைந்த பிறகே குழந்தை பிறந்ததாக பேசியிருந்தார். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் வெங்கடேஷ் பட் பேசிய இந்த வீடியோவை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மேலும் டிசைன் டிசைனாய் மீம்களை தாயாரித்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+