ஏஆர் ரகுமான் இசைக்கச்சேரிக்கு வந்து உயிர் போயிருக்கும்.. நெரிசலில் சிக்கி கதறிய ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறக்குமா நெஞ்சம் என்று எந்த நேரத்தில் பெயர் வைத்தாரோ ஏஆர் ரகுமான், அவரது ரசிகர்களால் மறக்கவே முடியாத நிகழ்வாகி விட்டது. கடும் போக்குவரத்து நெரிசல், கச்சேரி நடைபெறும் இடத்திலும் நெரிசலில் சிக்கி உயிர் பிழைத்தால் போதும் என்று கோபத்தோடும் கடும் மன உளைச்சலோடும் வீடு திரும்பியிருக்கின்றனர் ரசிகர்கள்.

சென்னையில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த இசைக்கச்சேரியைக் காண ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து டிக்கெட்ட பெற்ற ரசிகர்கள் அதை அனுபவிக்க முடியாமல் மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளனர்.

ஞாயிறு மாலை வீட்டை விட்டு கிளம்பிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இசையை ரசிக்க வந்த ரசிகர்கள் மிக மோசமான அனுபவத்தை பெற்றதாக கூறியுள்ளார்கள்.

சமூக வலைதளங்களில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகளை பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஏஆர் ரகுமான் #ARRahman என்ற பெயர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பெண்கள் பலரும் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கிய தங்களின் உயிர் போயிருக்கும் என்பது போல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

Very Worst Stampede like situation happening in AR Rahman concert fans post in Twitter

ஏற்கனவே இந்த பகுதியில் டிராபிக் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் என சென்னை போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Very Worst Stampede like situation happening in AR Rahman concert fans post in Twitter

ஏஆர் ரகுமான் இசைக்கச்சேரியை விவிஐபிக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்றும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய சாமானிய மக்கள் எப்படி சிரமப்படுகிறார்கள் என்றும் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் சென்னைவாசிகளுக்கு இன்றைய சண்டே மறக்கவே முடியாத ஞாயிறுக்கிழமை இரவாக மாறி விட்டது என்பதுதான் சோகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+