துணை வேந்தர் நியமனம்! ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதினாரா? நடந்தது என்ன?
சென்னை : பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நிய மிப்பது பல்கலைக்கழக மானியக்குழுசட்டத்துக்கு புறம்பானது என கூறி அது தொடர்பான மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர் என் ரவி கடிதம் எழுதியுள்ளார் என தகவல் வெளியான நிலையில் அப்படி கடிதம் எழுதவில்லை என ஆளுநர் மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது வரை பல்கலைக்கழகங்களில் வேந்தரான தமிழக ஆளுநராக நியமிக்கப்படுபவர்களுக்கே இருந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தரை தேர்வு செய்ய தேவைப்படும் போது பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர் மற்றும் கவர்னர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமிக்கப்படுவர்.

பல்கலைக்கழகங்கள்
இந்த டல் மற்றும் தேர்வுக்குழு துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்டபல்வேறு விஷயங்களை ஆராய்ந்து துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் இருந்து 3 பேரை தேர்வு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்வார்கள் . இவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமித்து உத்தரவிடுவார்

தீர்மானம்
இந்நிலையில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் 'தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும்,தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

துணைவேந்தர் நியமனம்
துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசை கவர்னர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மசோதா குறித்து தமிழக அரசின் தலைமைசெயலாளருக்கு ஆளுநர் சில விளக்கங்களை கோரி கடிதம் எழுதி உள்ளார் என தகவல்கள் வெளியானது.

கடிதமே எழுதவில்லை
'துணைவேந்தர்களை அரசே நியமிப்பதுஎன்பது பல்கலைக் கழக சட்டத்துக்கு புறம்பானது, அரசியல் தலையீட்டுக்கு வழிவ குக்கிறது' என கூறி சில விளக்கம் அளிக்க ஆளுநர் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடிதம் எழுதப்பட்டதா என ஆளுநர் மாளிகை தரப்படும் விசாரித்த போது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கும் மசோதா குறித்து ஆளுநர் மாளிகை எந்த விதமான அறிக்கையோ செய்தியோ வெளியிடவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன. தங்கள் தரப்பிலிருந்து கடிதம் எழுதவில்லை தற்போது எழுதி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலும் பொய்யானது ஒருவேளை அப்படி கடிதம் எழுதி இருந்தால் நாங்களே வெளியிட்டிருப்போம் என்கின்றனர் ஆளுநர் மாளிகை தரப்பினர்.












Click it and Unblock the Notifications